பக்கம்:கனவுப்பாலம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 47 ஞாபகம் இருக்கிறதா? அவள் முழுப் பெயர் என்ன. தெரியுமா? ஸெட்ஸ்கோ கிஜிமா. அவள் இனிஷியலும் எஸ். கே. தான். அவள் இறக்கும்போது அவளுடைய கையில் ஒரு கைக்குட்டை இருந்தது. அந்த கைக் குட்டை யில், எஸ். கே. என்ற எழுத்துக்கள் இருந்தன. அது அவளுடைய கைக்குட்டையா, அல்லது அவளே யாராவது கொல்ல முயன்ற போது அவர்கள் கையில் வைத்திருந்த கைக்குட்டையா?’ என்பதை போலீஸ் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது’ என்ருன் கெளதம். "ஆமாம்! நாங்க கூட பத்திரிகையிலே பார்த்தோம்.?? 'இப்ப நம்ம ஐந்து பேர் இனிஷியலும் எஸ். கே.” என் பெயர் ஸ்டாஹி கோ கொகாவா. நானும் எஸ். கே. தான். அந்தக் கொலேக்கு நம் ஐந்து பேரில் யாராவது சம்பந்தப்பட்டிருப்போமோ என்று சந்தேகப்பட்டிருக்கிருர் கள். அதல்ைதான் கடல்’ என்ற பெயரில் நம்மை இங்கே அழைத்து மோத விட்டிருக்கிருர்கள். இதுதான் என்னுடை யூகம்!’ - உேங்கள் யூகம் ரொம்ப சரி; ஆலுைம் எஸ். கே. என்ற எழுத்துக்கள் நம் இனிஷியலாயிருப்பது மட்டும் நம்மை இங்கே அழைப்பதற்குக் காரணமாயிராது. இந்த ஜப்பானில் எத்தனையோ எஸ்.கே.க்கள் இருப்பார்களே, அவர்களே யெல்லாம் கூப்பிடாமல் நம் ஐந்து பேரை மட்டும் ஏன் அழைத்திருக்கிருர்கள்? , இனிஷியலேத் தவிர வேருெரு காரணம் இருக்க வேண்டும்.’’ என்ருர் ஐம்பது. அதென்ன?’ என்று கேட்டான் கெளதம். கிஜிமா இறந்த அன்று நான் அந்த ஒட்டலில் தங்கியிருந்தேன். அதைப் போல நீங்களும் தங்கியிருக்க லாம். கொலே நடந்த அன்று அந்த ஒட்டலில் தங்கிய பெயர்களில் எஸ். கே. என்ற இனிஷியல் உள்ளவர்களே அழைத்திருக்கிருர்கள். நீங்கள் யாரும் தங்கவில்லை என்ருல் அதைச் சொல்லுங்களேன்’ என்ருர் ஐம்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/43&oldid=768637" இலிருந்து மீள்விக்கப்பட்டது