பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 7O == காதலும் பெருங்காதலும் காமம் வெம்சரம் படக்கருகும் மேனியான் சீதை தனியே இருந்தாள். அங்கு இராவணன் தவ வேடத்தில் சென்றான். அது பற்றி 'ஊண் இலன் ஆம், என உலர்ந்த மேனியன் சேண் நெறி வந்த தோர் வருத்தச் செய்கையன், காப்பரு நடுக்குறும் காலன், கையினன்; மூப்பெனும் பருவமும் முனிய முற்றினான்” இராவணன் இசையில் வல்லவன், சிறந்த இசை ஞானி. அதிலும் வீணையை மீட்டி இசைப்பதில் நிகரற்றவன். அவன் ஒரு மாவீரன் ஆயினும், சீதையின் பாலான காமவெறி பற்றிய காரணத்தால் உணவின்றி மெலிந்த மேனியனாக நெறியில்லாத செய்கையில் துவண்டான். அவன் வீணையின் இசைபட வேதம் பாடும் ஆற்றலும் அறிவும் பெற்றவன். இப்போது தாளத்தோடு இசைந்து நாட்டியம் ஆடுபவர்க்குத் துணையாகப் பாடுவதைப் போல சிரமப்பட்டான் என்று கம்பர் கூறுகிறார். சீதை இருந்த பர்ண சாலையின் வாசல் முன் இராவணத்துறவி சென்றான். அவனுடைய நாக்கு குளறுகிறது சொல் நடுங்குகிறது. அந்த நிலையில் குடிலுக்குள் இருப்பது யார் என்று கேட்டான். அந்த நிலையிலிருந்து இராவணனை காமம் வெம்சரம்படக் கருகும் மேனியான்’ எனக் கம்பர் குறிப்பிடுகிறார். ‘'தோமறு சாலையின் வாயில் துன்னினான், நாமுதல் குழறிட நடுங்கு சொல்லினான் யாவர் இவ்விருக்கையுள் இருந்துளிர்”என்றான் காமன் வெம்சரம் படக் கருகும் மேனியான்” என்பது பாடல். இராவணன் முதல் முதலாக சீதையைத் தனது கண்களால் காண்கிறான். அதை மிக நயமாகக் கம்பன் கூறுகிறார். அதே சமயத்தில் இராவணனுடைய காம வெறி நிறைந்த அவலத்தையும் சீதையின் பெருமைமிக்க கற்பு நிலையையும் தெளிவாகவும் உறுதியாகவும் தனது க் கவிதைச் சொற்களில் கம்பன் குறிப்பிடுவதைக் காண்கிறோம். 'வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன், அற்பின் நல்திளர புரள் ஒசை வேலையன்