பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AT&nf - அ.சீனிவாசன் 71 பொற்பினுக்கு அணியினைப், புகழின் சேக்கையைக் கற்பினுக்கு அரசியைக் கண்ணின் நோக்கினான்' யானையிடமிருந்து ஒழுகும் மத நீரைப் போன்று இராவணனுடைய _ம்பு வியர்த்துக் கொட்டுகிறது. அவன் ஆசையில் கடலைப் போன்றவன். அக்கடல், அலை ஒசை நிறைந்தும் அவ்வலைகள் போதியும் பொங்கியும் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. அந்த |லையிலிருந்த இராவணன் பொற்பினுக்கு அணியினை, புகழின் இருப்பிடத்தைக் கற்பினுக்கு அரசியைத் தன் கண்களால் கண்டான் என்பதைக் கம்பநாடர் குறிப்பிட்டுக் கூறுகிறார். இராவணன் சீதையை விரைவில் கொண்டு போய் அரக்கியர் நடுவில் அசோகவனத்தில் சிறை வைத்தான் என்பதைக் கம்பர் பிரான், 'வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டு போய்ச் செஞ்சவே திருஉருத்தீண்ட அஞ்சுவான், நஞ்சியல் அரக்கியர் நடுவண், ஆயிடைச் சிஞ்சுப வனத்திடைச் சிறை வைத்தான்; அரோ' என்று குறிப்பிடுகிறார். மாயமான் வடிவத்தில் வந்த மாரீசனைக் கொன்று விட்டுத் திரும்பிய இராமனை எதிர் கொண்டு இலக்குவன் வணங்கி, மாரீசன் செய்த வஞ்சனையை அறிந்து வேகமாகப் பர்ண சாலை வந்த போது அங்கு சீதையைக் காணவில்லை. நிலம் பெயர்ந்திருந்ததும் தேர் வந்து திரும்பியதும் முதலான அடையாளங்களைக் கண்டு தெற்கு நோக்கி இருவரும் நடந்தனர். வழியில் இராவணனால் அடிபட்டு குற்றுயிராய்க் கிடந்தக் கழுகு வேந்தன் சடாயுவைக் கண்டனர். ச யு நடந்த விவரங்களைக் கூறினான். சீதையை மண்ணினோடு இராவணன் எடுத்துச் சென்ற போது அவனை எதிர்ப்பட்டுத் தடுத்தேன் கடும் போராட்டத்திற்குப் பின்னர் அவன் தனதுத் தெய்வீகவாளால் என் சிறகுகளை வெட்டி என்னைக் கீழே தள்ளி விட்டுச் சீதையைத் துக்கிக் கொண்டு அரக்கன் ஒடிப் பறந்து விட்டான், என்று நடந்த செய்திகளைத் தெரிவித்தான். இராமன் அது கேட்டுக் கடுஞ்சினம் அடைகிறான். தன் மனையாளை மற்றொருவன் அபகரித்துச் சென்றது கேட்டால் எந்த ஆண் மகனுக்கும் கடும் கோபம் வருவது இயல்பாகும். இத்தகைய கோபம் இராமனுக்கு வந்தது, என்பதைக் கம்பன் தனதுக் கவிதைச் சொற்களில் குறிப்பிடுவது தனி இலக்கியத் தன்மை கொண்டதாகும்.