பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் "அழுந்திய சிந்தையள் ஆகி, அரக்கி எழுந்துயர் காதலின் வந்து எதிர்நின்றாள் புழுங்கும் என் நோய் கெடப்புல்லு வென்; அன்றி விழுங்கு வெனாம் என விம்மல் உழன்றாள்' 77 என்று கம்பநாடர் குறிப்பிடுகிறார். இங்கு அயோமுகி என்னும் அரக்கிக்கு ஏற்பட்ட காம வெறி பற்றிச் சுருக்கமாக வெனினும் அழுத்தமாகக் கம்பன் எடுத்துக் கூறுகிறார். அவ்வனத்தில் அயோமுகி இலக்குவனைக் காண்கிறாள். அழுந்திய சிந்தையளாகிறாள். எழுந்துயர் காதலின் வந்து எதிர் நின்றாள். புழுங்கும் என் நோய் கெடப்புல்லுவேன் என்கிறாள். இல்லாவிட்டால் உன்னை விழுங்கி விடுவேன் என்கிறாள். அவ் விம்மல் உழன்றாள் இன்னும் கூறுகிறாள். "நான் உன்னை விரும்பி வரும் போது நீ மறுப்பாயேல், உன்னைப் பிடித்துக் கடத்திக் கொண்டு போய் உன்னை விரும்பி மார்பிலே கட்டித் தழுவிக் கொள்வேன்’ என்று அவள் தனக்குள் கூறிக் கொள்வதைக் கம்பன் குறிப்பிடுகிறார். 'இரந்தனென் எய்திய போது இசையாது கரந்தனனேன், நனி கொண்டு கடந்தென் முரஞ்சினில் மேவி முயங்குவென்; என்று விரைந்தெதிர் தந்தனள் தீயினும் வெய்யாள்' என்பது கம்பனுடைய அருமையான கவிதை. காம உணர்வின் மூலம் எழும் நிறைந்த ஆசையின் காரணமாக நீர் நிறைந்து பொங்கிய கண்களில் குன்றி மணியில் உள்ள கருப்பு வட்டம் பளிச்சென்று மின்னுவதைப் போல தனது கண்களால் அகல விரித்து கொண்டு அவள் வருவதை நட்சத்திரங்களின் ஒளியில் லேசான வெளிச்சம் கொண்ட இருளில் திரியும் இலக்குவன் கண்டான். “நின்றனள் ஆசையின் நீர்கலுழும் கண் குன்றி நிகர்ப்ப குளிர்ப்ப விழிப்பாள்; மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால் கன்று இருளில் திரி கோளரி கண்டான்' என்ற கம்பர் குறிப்பிடுகிறார்.