பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 76 حجيصحح - காதலும் பெருங்காதலும் வல்லமையை என்ன வென்று கூறுவது என்று இராமன் வருந்துகிறான். “நின்று பல்லுயிர் காத்தற்கு நேர்ந்தயான், என்துணைக்குல மங்கை ஒர் ஏந்திழை தன்துயர்க்கடல் தீர்க்கும் சதிர் இலேன்; நன்று நன்று என் வலி என நானுமால்' என்று இராமன் வருந்தி வெட்கப்படுவதாகக் கம்பர் குறிப்பிடுகிறார். இங்கு சீதையின் பால் இராமனுக்கு உள்ள காதல் மிகுதியையும் அவளுக்கு ஏற்பட்டத் துன்பத்தைப் போக்க முடியாமல் இராமன் வருந்துவதையும் கம்பன் மிகவும் நுட்பமாகத் தனது பாடல்களில் குறிப்பிடுகிறார். ஆரண்ய காண்டத்தில் சூர்ப்பனகையின் பெருங்காதல் பற்றியும் இராவணனுடைய பெருங்காதல் மற்றும் காம உணர்வின் மேலாண்மை பற்றியும் சீதை மீதான காதல் மிகுதியால் இராமன் மாயமானுக்குப் பின்னால் போனதும் சீதையின் பிரிவால் இராமன் காதல் துன்பம் அடைவதும் பற்றியும் மிகவும் அற்புதமாகக் கம்பன் காட்சியைக் காண்கிறோம். 11. ஆசையின் வந்த அயோமுகி இராமனும் இலக்குவனும், சீதையைத் தேடிக் கொண்டுக் காட்டு வழியே பலகாத தூரம் சென்றனர். மாலை வந்தது. ஒரு சோலையை அடைந்தனர். சூரியன் மறைந்தான். இருவரும் அச்சோலையில் தங்கு வதற்கு ஏற்பாடு செய்து கொண்டனர். இராமன் இலக்குவனிடம் நீர் இருக்குமிடம் தேடி சற்று நீர் கொண்டு வரும்படி கூறினான். இலக்குவன் தண்ணிர் இருக்குமிடம் தேடிச் சென்றான். சுற்றிலும் தேடினான். எங்கும் காணவில்லை. அப்போது அயோமுகி என்னும் அரக்கி இலக்குவனைக் கண்டாள். அவனை விரும்பி அவள் அழுந்திய சிந்தையளாகி காதல் உணர்வு பெருக அவனெதிரில் வந்து நின்றாள். தனது காம நோயைத் தீர்க்கும்படி இலக்குவனை வற்புறுத்தினாள்.