பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_சினிவாசன் 83 "கோவியல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கெலாம், ஒவியத்து எழுத வொண்ணா உருவத்தாய் உடைமை யன்றோ? ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னைத் திகைத்தனை போலும் செய்கை' என்று கேட்கிறான். தனது காதல் மிகுந்த மனைவியை இழந்த போது கருத்தழிந்து திகைத்துப் போய் நிலையிழந்து தர்மத்திற்கு மாறான செய்கையைச் செய்து விட்டானோ என்று வாலி கூறுவதைக் கம்பன் குறிப்பிடுகிறார். அழித்தனை மனையின் மாட்சியை வாலி எழுப்பிய வசைகளுக்கும் கேள்விகளுக்கும் பதில் கூறும் வகையில் இராமன் பேசுகிறான். வாலியிடம் மற்றொருவன் புணர்தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கு, அரும்கடி மங்கையர் திறம் திறம்பல், தவறான ஒழுக்கங்கள் என்றும், அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை” என்றெல்லாம் வாலியின் பால் இருந்த ஒழுக்கக் குறைவினை இராமன் சுட்டிக்காட்டுகிறான். வாலி அதற்கான பதிலைக் கூறுகிறான். சமுதாயச் சூழலுக்கு கேற்ப பாலுறவுப் பண்பாடுகள் அமைந்திருப்பதாக வாலியின் பதில் அமைந்திருந்தது. ஒவ்வொரு குலத்திற்கும் ஏற்றவாறு பால் ஒழுக்கம் அமைந்திருப்பதாக வாலி கூறுகிறான். “ஐய! நுங்கள் அரும் குலக்கற்பின் அப் பொய்யில் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் செய்திலன் எமைத் தேமலர் மேலவன்; எய்தின் எய்தியதாக இயற்றினான்' என்றும் “மணமும் இல்லை மறை நெறிவந்தன குணமும் இல்லைக் குலை முதற்கு ஒத்தன; உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கலால் நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்!” என்றும் வாலி கிட்கிந்தை சமுதாயத்தின் ஒழுக்க நெறி குறித்துக் கூறுகிறான். “அவரவர் விருப்பம் படியும் நோங்கிய படியும் உணர்வு செல்லும் வழியில் செல்வதே எங்கள் குலவழி, அதில் என்ன குற்றம் கண்டீர்” என்று தங்கள் குல ஒழுக்கம் பற்றி வாலி பேசுகிறான்.