பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 84 இங்கு கிட்கிந்தையின் உண்மை நிலைமைப் பற்றி வாலி குறிப்பிடுகிறான். ஆனால் குல ஒழுக்கம் என்று கூறி குறைகளையும் கேடுகளையும் நியாயப்படுத்துவது கூடாது. எனவே ஐம்புலன்களையும் ஒரு முகப் படுத்தி அறிவின் வழியில் செல்வதே அற நெறியல்லாமல் குல வழி என்று எதுவுமில்லை. ஒழுக்கம் என்பது அறிவைப் பொருத்ததாக இருக்க வேண்டியதல்லாமல் உடலைப் பொருத்ததாக இருத்தலாகாது. அவை யெல்லாவற்றையும் நன்கு அறிந்த நீயே அப்படி நடந்து கொள்ளலாமா? "பொறியின்யாக்கையதோ? புலன் நோக்கிய அறிவின் மேலதன்றோ அறத்து ஆறுதான்; நெறியின் நோன்மையை நேரிது உணர்ந்த நீ பெறுதியோ பிழை உற்றுறு பெற்றி தான் என்றும் சிந்தை நல்லறத்தின் வழிச் சேர்தல் வேண்டும்” எனவும் இராமன் கூறுகிறார். நன்று தீ தென்று பிரித்துப் பார்க்கும் நல்லறிவு இல்லாத வாழ்க்கை விலங்கியல் வாழ்க்கையாகும். நீ எல்லாம் அறிந்தவன் நீ அறியாத நெறி எதுவுமில்லை என்றும் வாலியிடம் இராமன் கூறுகிறான். இன்னும், “தக்கது இன்ன, தகாதன இன்ன, என்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே, மனுவின் நெறி புக்கவேல், அவ்விலங்கும் புத்தேளிரே' என்றும் வாலியிடம் இராமன் எடுத்துக் கூறுகிறார். எக்குலத்தில் பிறந்தாலும் அவரவர் ஆற்றும் செய்கையால் வருவதே மேன்மையும் கீழ்மையும் அல்லாமல் பிறப்பால் அல்ல என்பதை நீ அறிவாய். அதைத் தெளிவாக நீ அறிந்திருந்தும் மனையின் மாட்சியை அழித்தாய். “சினையது ஆதலின் எக்குலத்து யாவர்க்கும் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் அனைய தன்மை அறிந்தும் அழித்தனை மனையின் மாட்சியை என்றான் மனு நீதியான்' என்றும் இராமபிரான் கூறுகிறான்.