பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 86 تدخيصلإح காதலும் பெருங்காதலும் இங்கிருந்து நீயோ உனக்கு உரிய இடத்திற்குச் சென்று உனது இயல்பான இருக்கையை அடைந்து உன்னுடைய மரபு வழியில் நின்று அரசியல் விதிமுறைகளை இயற்றி அரசுக்கேற்ற அனைத்தையும் சிறப்பாகச் செய்து வாலியின் மைந்தன் அங்கதனோடு சேர்ந்து எல்லாச் செல்வங்களையும் நலன்களையும் பெற்று வாழ்வாயாக என்று இராம பிரான் சுக்கிரீவனை வாழ்த்தினார். அத்துடன் அரசியல் மற்றும் ஆட்சி முறைமைப் பற்றிய அறிவுரைகளையும் இராமபிரான் எடுத்துக் கூறுகிறார். “வாய்மை சால் அறிவின் வாய்ந்த மந்திர மாந்தரோடும் தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத் தொழில் மறவரோடும் துய்மைசால் புணர்ச்சி பேணித் துகள் அறு தொழிலையாகிச் சேய்மையோடு அணிமையின்றித் தேவரின் தெரிய நிற்றி’’ என்றும், 'புகையுடைத்து என்னின் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும் மிகை உடைத்து உலகம்; நூலோர் வினையமும் வேண்டல் பாற்றே; பகையுடைச் சிந்தையார்க்கும்; பயன் கூறுபண்பின் தீரா நகை உடை முகத்தையாகி இன் உரை நல்கு வாயால்’’ என்றும், 'செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை வைவன வந்த போதும் வசையில இனிய கூறல் மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃல் இன்மை; உய்வனவாக்கித் தம்மோடு உயர்வன, உவந்து செய்வாய்' 'ல்றும். 'சிறிய என்று இகழ்ந்து நோவு செய்வன செய்யல்; மற்று இந் நெறியிகழ்ந்து யான் ஓர் தீமை இழைத்தலால், உணர்ச்சி நீண்டு குறியன G೦ಗ್ಲಿಲ್ಲ. கூனியால், குவவுத் தோளாய்! வெறியன எய்தி. நெப்தின், வெம்துயிர் கடலில் வீழ்ந்தேன். எனறும.