பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 1M எனவே கடினமான வேலையைக் கட்டாயம் கருதி எடுத்துக் கொண்டு அப்பணியைச் செய்து முடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நமது நாடு ஞானத்தில் (அறிவில்) சிறந்த நாடு. ஆயினும் காலக்கிரகத்தால் இடைக் காலத்தில் ஏற்பட்ட பல தடைகளால் இன்னும் மடமையில் ஊறிக்கிடக்கும் கோடி கோடி மக்களைக் காண்கிறோம். மகாகவி பாரதி 'நெஞ்சு பொருக்குதில்லையே - இந்த நிலை கெட்ட மனிதனை நினைந்து விட்டால்” என்று தொடங்கி “நண்ணிய பெருங்கலைகள் - பத்து நாலாயிரம் கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே இவர் பொறியற்ற விலங்குகள் போல் வாழ்வார்' என்று குறிப்பிடுகிறார். கல்வியில் பெரிய கம்பன் பிறந்த தமிழ் நாட்டில் ஏன் கல்வியின்மை இன்னும் நீடிக்க வேண்டும்? அது நமது குறைதானே? தமிழ்ச் சாதியைப் பற்றி மகாகவி பாரதி குறிப்பிடும் போது, 'சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும், திருக்குறள் உறுதியும், தெளிவும், பொருளின் ஆழமும், விரிவும் அழகும் கருதியும் எல்லையொன் றின்மையெனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்பு நான் தமிழ்ச் சாதியை அமரத்தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்’ என்று கூறுகிறார். இதில் பாரதி கம்பனைப் பற்றிக் குறிப்பிடும் போது “எல்லை யொன்றின்மை யெனும் பொருளதனைக் காட்டிட” முயல்வதாக மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி விட்டார். கம்பன் எந்தப் பொருளைப் பற்றிப் பேசத் தொடங்கினாலும் அதன் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கிறார். இராமனைப் பற்றி அவனுடைய உயர்வைப்பற்றிக் கம்பன் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார். அதில் கவந்தன் இராமனை வாழ்த்து போது; 'ஈன்றவனோ எப்பொருளும்! எல்லை தீர் நல்லறத்தின் சான்றவனோ! தேவர் தவத்தின் தனிப் பயனோ! மூன்று கவடாய் முளைத்தெழுந்த மூலமோ! தோன்றி அருவினையேன் சாபத்து இடர் தொலைத்தாய்”