பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 1 O2 تحجج لإصلإعلا காதலும் பெருங்காதலும் சீதையைக் கண்டு அவளுக்குத் தெளிவு சொல்லி மீளலாம். சீதை இலங்கையில் உள்ளாள் என்பதை இராமனிடம் உணர்த்தலாம். மேற்கொண்டு செய்ய வேண்டியதையும் செய்யலாம்’ என்றும் கூறுகிறான். இந்த செய்தியைக் கூறும் போது சம்பாதி சீதையைப் பற்றிக் குறிப்பிடுகையில், பாகொன்று குதலையாள் என்றும் 'வேகின்ற உள்ளத்தாள்’ என்றும் குறிப்பிடுகிறான். மேலும் சம்பாதி இந்த செய்தியைப் பற்றிக் கூறும் போது, 'எல்லோரும் இலங்கை மூதுரை அடைவது என்பது எளிதன்று. உங்களில் மிக்க வல்லமையுடையவன் ஒருவன் அங்கு மறைந்து சென்று சீதையைக் கண்டுத் தெளிவு கூறித் திரும்பலாம், அல்லது நான் சொன்ன செய்தியையும் விவரங்களையும் இராமபிரானிடம் தெரிவிக்கலாம் என்றும் எடுத்துக் கூறினான். 'பாகொன்று குதலையாளைப் பாதக அரக்கன் பற்றிப் போகின்ற பொழுது கண்டேன் புக்கனன் இலங்கை, புக்கு வேகின்ற உள்ளத்தாளை வெம்சிறை அகத்து வைத்தான் ஏகுமின் காண்டிர் ஆங்கே இருந்தனள் இறைவி இன்னும்,” என்றும் 'எல்லீரும் சேரல் என்பது எளிதன்று அவ்விலங்கை மூதுர், வல்லிரேல், ஒருவர் ஏகி, மறைந்தவண் ஒழுகி, வாய்மை சொல்லிரே துயரை நீக்கித் தோகையைத் தெருட்டி மீள்திர்! அல்லிரேல் என் சொல்தேறி, உணர்த்துமின் அழகற்கு அம்மா!' இவ்வாறு சம்பாதி கூறி நான் கழுகினத்தைக் காக்கச் செல்கிறேன். உங்களுக்கு எது நல்லதோ, எது சாத்தியமோ அதைச் செய்யுங்கள் உங்கள் முயற்சி வெற்றியாகட்டும் என்று கூறிக் சென்றான். மாதர் நலம் பேணாது வளாந்தீர் அதன் பின்னர், அங்கதனும் மற்ற வானரரும் கடலைத் தாண்டி இலங்கை செல்வது நம்மால் சாத்தியமில்லை. நாம் திரும்பிச் சென்று விடலாம். இராமபிரானிடமும், நமது மன்னனிடமும் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லி விடலாம் என்று கருத்துக் கூறினர். அப்போது சாம்பவன் மாருதியைப் பார்த்து நாம் சீதையைக் காணாமல் திரும்பக் கூடாது. உன்னைப் போல ஒரு வல்லமை மிக்கவன் உலகில் எங்கு மில்லை, என்று மாருதியின்