பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 123 'தனியன் நின்றனன்; தலைபத்தும் கடிது உகத்தாக்கிப் பனியின் வேலையில் இலங்கையைக் கீழ் உறப் பாய்ச்சிப் புனித மாதவத்து அணங்கினைச் சுமந்தனென் போவேன் இனிதின் என்பது நினைத்தனன், கரம் பிசைந்து இருந்தனன்' என்று உள்ளம் குமுறிக் கைகளைப் பிசைந்தான். ஒரு அரக்கன் தனது காம வெறி காரணமாக, பெருங்காதல், பெண்ணாசை காரணமாக மாற்றான் மனைவியை வன்முறையில் வஞ்சகமான வழியில் துக்கிக் கொண்டு வந்து சிறை வைத்துள்ளான். சாபத்தின் காரணமாக இலங்கை வேந்தன், தன் மீது விருப்பம் இல்லாத பெண்ணைத் தொட முடியாது என்ற காரணத்தினால் அவ்வாறு தொட்டால் அவனுடைய தலையே வெடித்து விடும் என்னும் காரணத்தினால் சிறை வைக்கப்பட்டுள்ளவளிடம், தனது அதிகாரத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளவளிடம், வன்முறை வழியில் செல்லாமல் கெஞ்சுதல் முறையில் தனது ஆசைக்கு இணங்குமாறு தனது விருப்பத்திற்கு இசையுமாறு வேண்டுகிறான். அவள் அதை மறுத்துப் பேசும் போது எதிர்த்துப் பேசும் போது அவனுடைய வஞ்சகச் செயலை இடித்துக் கூறும் போது, அவனுக்குக் கோபம் வருகிறது. அவனுடைய கம்பீரத்திற்கு, வல்லமை மிக்க ஆட்சி அதிகார பலத்திற்குச் சவாலாக எதிர் கொள்கிறது. அவனுடைய காமத்தின் திறத்தையும் கடந்து செல்கிறது அவனுடைய சீற்றம். அவனுடைய உள்ளத்தில் எழுந்த சீற்றமும் காமமும் எதிர் எதிராக நின்று மோதுகின்றன. சீற்றமும் காதல் வேகமும், காமத்தின் வெறியும் ஒன்றையொன்று மோதி அலைபோல் மேல் எழுந்து விளிம்பிற்குச் சென்று விட்டது. உணர்ச்சி வசப்பட்டு வரம்பையும் மீறி விளிம்புக்கு அப்பால் சென்று அவளுடைய கையைத் தொடுவதற்கு முற்பட்டால்? இடமோ இலங்கை. அரக்கனின் ஆட்சியின் கீழ் உள்ள நாடு, நகரம், சோலைவனம், அசோகவனம், அரசனுடைய உபவனம், சிறை வைப்பட்டிருப்பவளோ, அப்போதைக்கு ஆதரவில்லாத அபலைப் பெண் . காவல் இருப்பவர்களோ, அரக்கனுடைய அதிகாரத்திற்குட்பட்ட ஆட்கள். அவ்வரக்கன் என்ன செய்தாலும் அதைத் தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லாத நிலை. அந்த இடத்தில் சீதாபிராட்டியைத் தெய்வமாக மதிக்கும் அனுமன் ஆற்றல் மிக்க அனுமன், அரக்கனுக்கு ஈடான வல்லமைமிக்க அனுமன், மறைந்து நின்று இந்தக் காட்சியைக் கண்டு, கரம்