பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் _ xiv வளமான வாழ்வு ஆகியவைகளைப் பற்றி விவரித்துக் கூறிக் கடைசியில், “கல்லாது நிற்பார் பிறர் இன்மையின், கல்வி முற்ற வல்லாரும் இல்லை; அவை வல்லர் அல்லாரும் இல்லை; எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாறும் இல்லை; உடையார்களும் இல்லை; மாதோ!' என்றும் இன்னும் அதற்கும் மேலாக, 'ஏகம் முதல் கல்வி முளைத்தெழுந்து, எண்ணில் கேள்வி ஆகும் முதல்திண் பனைபோக்கி, அரும் தவத்தின் சாகம் தழைத்து, அன்பு அரும்பித், தருமம் மலர்ந்து, போகம் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே' என்று மிகவும் உயர்ந்த நிலைக்கு மக்களின் வாழ்க்கை நிலைமையைப் பற்றி எடுத்துக் காட்டுவதைக் காண்கிறோம். பாலைவனத்தின் கொடுமையான வறட்சியான, பசையற்றுப் போன, மண்ணும் குறுமணலும் நிறைந்த காட்சியைப் பற்றிக் கூறும் போது, 'தாவரும் இருவினை செற்றுத் தள்ளரும் மூவகைப்பகை அரண் கடந்து, முத்தியில் போவது புரிபவர் மனமும், பொன்விலைப் பாவையர் மனமும்போல் பசையும் அற்றதே!' என்றும் தாடகையைப் பற்றிக் கூறும் போது. 'மண் உருத்து எடுப்பினும், கடலை வாரினும் விண் உருத்து இடிப்பினும், வேண்டின் செய்கிற்பாள்; எண் உருத்தெரிவரும் பாவம் ஈண்டி ஓர் பெண்உருக் கொண்டேனத் திரியும் பெற்றியாள்' என்று தாடகையின் செய்கைகளின் கொடுமை நிலையைக் குறிப்பிடுகிறார். அரசியல் மற்றும் ஆட்சி முறையைப் பற்றிப் பல இடங்களிலும் கம்பர் மிகவும் சிறப்பான கருத்துக்களை முன்வைத்துப் பேசுகிறார். இராமனுக்கு முடி சூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்த போது வசிட்டன் இராமனுக்குக் கூறிய நல்லுரைகள் மிகவும் சிறந்த அரசியல் நெறிமுறைகள் நிறைந்த கருத்துக்களாகும் அவைகளில்,