பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கம்பநாடன் காவியத்தில் 162 ※=>— காதலும் பெருங்காதலும் “பருந்துணப் பாட்டியாக்கை படுத்த நாள், படைஞரோடும் மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள், வனத்துள் வைகி இருந்துமி வந்த தங்கை மூக்கும் வெம் முலையும் எம்பி அரிந்த நாள், வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை உண்டோ? 'கிளையோடும் படைஞரோடும், கேடு இலா உயிர் கட்கு எல்லாம் களை எனத் தம்பிமாரை வேரொடும் களையக் கண்டும், இளையவன் பிரிய மாயம் இயற்றி, ஆயிழையை வெளவும் வளை எயிற்று அரக்கன் வெம் போர்க்கு இனி எதிர் வருவது உண்டோ? “ஏந்திழை தன்னைக் கண்ணுற்று, எதிர்ந்தவர் தம்மை எற்றிச் சாந்து எனப்புதல்வன் தன்னைத் தரையிடைத் தேய்த்துத் தன் ஊர் காந்து எரி மடுத்துத்தானும் காணவே கடலைத் தாவிப் போந்தபின் வந்திலாதான் இனிப் பொரும் போரும் உண்டோ?” “என்றிவை இயம்பிவா என்று ஏவினன் என்னை; எண்ணி ஒன்றுனக்கு உறுவது உன்னித் துணிந்துரை, உறுதி பார்க்கின் துன்று இரும் குழலை விட்டுத் தொழுது வாழ்; சுற்றத்தோடும் பொன்றுதி ஆயின் என்பின் வாயிலில் புறப்படு’ என்றான்' என்று அங்கதன் துதுரைத்தான் இதைக் கேட்டதும் இராவணன் பெரும் சினம் கொண்டு அவனைப் பற்றுமின், எற்றுமின்” எனக் கத்தினான். தன்னைப் பிடிக்க வந்தவர்களைக் கொன்று விட்டு வான் வழியே வந்து இராமனின் பாதங்களை வணங்கி நின்றான். அங்கதன் தனது துTதுரையில் பழைய நிகழ்ச்சிகளை யெல்லாம் நினைவூட்டி இராவணனுடைய இழி செயல்களை நினைவூட்டி தேவியை விடுக அன்றேல் ஆவியை விடுக என்ற கூறிவிட்டு இராமனிடம் வந்து, அரக்கனிடம் எத்தனை கூறியும் அவன் சீதை மீதுள்ள ஆசையை விடவில்லை, மூர்க்கன் முடித்தலை அற்ற போது அன்றி ஆசை அறான்” என்று துது சென்ற செய்தியைக் கூறி முடித்தான். கம்பன் இங்கு ஒரு அருமையான போர்கால அரசியல் காட்சியைக் காட்டுவதைக் காண்கிறோம்.