பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 26. குலத்து மானம் தீர்ந்திலன் 169 மகோதரன் கூறியவற்றைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த இராவணன் தனது உடன் பிறப்பான பின்னோன் கும்பகருணப் பெயருடைய மாவீரனை பெருந்துக்கத்திலிருந்து எழுப்பி, உணவூட்டி, ஆயுத பாணியாக அலங்கரிக்கச் செய்தான். பல்கலன் பூட்டுவதை உணர்ந்த கும்பகருணன், என்ன நேர்ந்துள்ளது என்று கேட்க, வானரப் பெரும்படையும் அந்த மானுடரும் கோநகரின் புறம் சுற்றி வளைத்துள்ளனர். முதல் வெற்றியும் பெற்று விட்டனர். நீ போய் அவர்களை ஒழிக்க வேண்டும் என்று இராவணன் தனது தம்பியைக் கேட்டுக் கொண்டான். கும்பகருணன் தனது அண்ணனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டுக் கவலை கொள்கிறான். "ஆனதோ வெம்சமம்? அலகில் கற்புடையச் சானகி துயர் இனும் தவிர்ந்தது இல்லையோ வானமும் வையமும் வளர்ந்த உனது வான் புகழ் போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே?” "கிட்டியதோ செருக்கிளர் பொன் சீதையைச் சுட்டியதோ? முனம் சொன்ன சொற்களால் திட்டியின்விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ? இது விதியின் வன்மையே!” சீதை காரணமாகப் போர் மூண்டதோ? நான் முன்னர் கூறிய சொற்களின் படி திட்டியின் விடம் அன்ன கற்பின் செல்வியை விட்டிலையோ? என்று இன்னும் பல வகையில் தனது அண்ணனுடைய தவறான செயல்களைச் சுட்டிக் காட்டிப் பேசுகிறான். மேலும் கூறுகிறான் தையலை விட்டு அவன் (இராமன்) சரணம் தாழ்ந்து நின் அய்யறு தம்பியோடு அளவளாவிக் கொள்ளுதல் நல்லது. அதுவே உய்யும் வழியுமாகும். அது அல்லாவிட்டால், தனித்தனியாகவும் பகுதி பகுதியாகவும் நமது படைகளைப் போருக்கு அனுப்பி பலியிடுவது சிறந்த போர்த்தந்திரமும் ராஜ தந்திரமும் ஆகாது, என்று கும்பகருணன் கூறுகிறான்.