பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 171 இருவருக்கும் அண்ணன் இராவணனிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் இருந்தது. இருவரும் இராவணன் சீதையை அபகரித்து வந்ததை மறுத்துப் பேசுகிறார்கள். சீதையை விட்டு விடும்படி இருவரும் கூறுகிறார்கள். ஆயினும் நடை பெற்ற விவாதத்தின் வாக்கு வாதத்தின் முடிவாக வீடணன், இராவணனை விட்டு வெளியேறி இராமனிடம் வந்து சேர்ந்து விடுகிறான். கும்பகருணன் இராவணனுக்காகப் போர்க்களத்திற்கு வந்து உயிர் விடுகிறான். போர்க் களத்தில் வீடணனும் கும்பகருணனும் சந்தித்துப் பேசுகிறார்கள். இருவருக்குமிடையில் சகோதர பாசம் மிகுந்த ஒரு அற்புதமான உரையாடல் நடைபெறுகிறது. அவ்வுரையாடலில் அரசியல் நெறி, ஆழ்ந்த சகோதர பாசம், நீதி நெறி, ஒழுக்க நெறி, அற நெறி பற்றிய பல கருத்துக்களும் பேசப்படுகின்றன. ஆயினும் இருவரும் பிரிந்து விடுகின்றனர். கும்பகருணன் தருமத்தை உணர்ந்தவன் என்பது கருதி சுக்கிரீவனும் இராமனும் கலந்து பேசி வீடணனிடம் கும்பகருணனை சந்தித்துப் பேசுமாறு கூறினர். வீடணனும் சம்மதித்துத் தனது முன்னோனை சந்திக்கிறான். தன் அருகில் வந்த வீடணனைக் கட்டித் தழுவி உச்சி மோந்து, நீ ஏன் என்னிடம் வந்தாய் நீ ஒருவனாவது உய்ந்தாய் என்று மகிழ்ச்சி கொண்டிருந்தேன். நீ ஏன் என்னிடம் திரும்பி வந்தாய். நீ இராமனிடம் அபயம் பெற்றாய். அமரராலும் பெற முடியாத ஒரு பேற்றை நீ பெற்று விட்டாய் என்று பெருமகிழ்ச்சியடைந்திருந்தேன். நீ கவிஞரின் அறிவு மிக்கவன். சாகும் தறுவாயில் உள்ள எங்களிடம் எந்தக் குற்றமும் செய்யாத நீ ஏன் வந்தாய். நீ அமுதம் உண்பவன், எங்களுடன் நஞ்சுண்ண வரலாமா? நமது குலம் அழிந்து விட்டாலும் நீ ஒருவனாவது நின்று புலத்தியன் மரபைக் காப்பாய் என்றிருந்தேன் நீ ஏன் திரும்பி வந்தாய். என் வாய் உலர்கிறது. 'அறப் பெரும் துணைவர் தம்மை 'அபயம் என்று அடைந்த நின்னைத் துறப்பது துணியார், தங்கள் ஆருயிர் துறந்த போதும், இறப்பு எனும் பயத்தை விட்டாய்! இராமன் என்பானைப் பற்றிப் பிறப்பு எனும்புன்மை தீர்ந்தாய்! நினைந்து என் கொல் பெயர்ந்த வண்ணம்'