பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 176 تدخلإصلاح காதலும் பெருங்காதலும் 'பெய்தவத்தின் ஓர் பெண் கொடி எம்முடன் பிறந்தாள், செய்தகுற்றம் ஒன்று இல்லவள், நாசி வெம் சினத்தால் கொய்த கொற்றவ! மற்றவள் கூந்தல்தொட்டு ஈர்த்த கை தவத்திடைக் கிடத்துவென்; காக்குதி ! என்றான்' என்று கும்பகருணன் இலக்குவனிடம் சவால்விடுகிறான். இக் கேள்விக்கு இலக்குவனிடமிருந்து நேரடியான பதில் வரவில்லை. இக் கேள்விக்குச் சொல்லினால் பதில் சொல்வதற்கு இயலாது. அதற்கு வில்லினால் பதில் கூறுவோம் என்று தான் இலக்குவன் பதிலளிக்கிறான். அதாவது தன் பலத்தின் நிலையிலிருந்து பதில் வருகிறது. 'அல்லினால் நிறத்தவன், அனையது பகர மல்லினால் செய்த புயத்தவன், மாற்றங்கள் நும்பால் வில்லினால் சொல்லின் அல்லது, வெம்திறல் வெள்கச் சொல்லினால் சொலக் கற்றிலம்யாம்; எனச் சொன்னான்' என்று தான் இலக்குவன் பதில் கூறுகிறான். இலக்குவனை எதிர்த்துக் கும்ப கருணன் கடும் போர் நடத்தினான். இலக்குவனை அரக்கர் படைகள் சூழ்ந்து கொண்டன. சுக்கிரீவன் புகுந்து கும்பகருணனை எதிர்த்தான். இருவரும் மற்போர் செய்தனர். கும்பகருணன் சுக்கிரீவனை இருகப் பிடித்து அழுத்த உணர்விழக்கச் செய்து, அவனைத் துக்கிக் கொண்டு கோட்டை வாசலுக்கு ஓடினான். அப்போது இராமன் தலையிட்டு அவன் நெற்றி மீது இரு கணைகளை ஏவினான். சுக்கிரீவன் கும்பகருணனுடைய பிடியிலிருந்து விடுபட்டான். அதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். சுக்கிரீவனைக் கண்டு இராமனும் மகிழ்ச்சியடைந்தான். அது பற்றி, “காந்து இகல் வெம் கரத்து நீங்கிய ஏந்தலை அகமகிழ்ந்து எய்த நோக்கிய வேந்தனும், சானகி இலங்கை வெம் சிறைப் போந்தனன், ஆம்’ எனப் பொருமல் நீங்கினான்' என்று கம்பன் குறிப்பிடுகிறார். கும்பகருணனுக்கும் இராமனுக்கும் கடும் போர் நடந்தது. கும்பகருணன் வாளேந்திப் போர் புரிந்தான், இராமன் அவ்வாளைத் தன் கணையால் வீழ்த்தினான்.