பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 191 அச்செய்தியைக் கேட்டு இராமன் அதிர்ச்சியடைந்தான். நா எளவில்லை. பேரபிமானம் (சீதையின் மீதான பெரும் அன்பும் அபிமானமும்) என்னும் பேராயுதம் தனது இதயத்தைத் தாக்க உயிர் இல்லாதவன் போலச் சாய்ந்தான். 'சித்திரத்தன்மை யுற்ற சேவகன் உயர்வு தீர்ந்தான்; மித்திரர் வதனம் நோக்கான்! இளையவன் வினவப் பேசான்; பித்தரும் இறை பொறாத, பேர், அபிமானம் என்னும் சத்திரம் மார்பில் தைக்க, உயிர் இலன் என்னச் சாய்ந்தான்' இலக்குவனும் மயக்கம் கொண்டு கீழே சாய்ந்தான். வீடணனும் செய்தியைக் கேட்டு நடுக்கமுற்றான். இருப்பினும், “வெல்லவும் அரிது நாசம் இவள் தனால் விளைந்தது, என்று கருதி இந்திரசித்தன் சீதையைக் கொன்று விட்டானோ? என்று ஐயம் கொண்டான். “தையலைத் துணையிலாளைத் தவத்தியைத் தருமக் கற்பின் தெய்வதன் தன்னை, மற்றுன் தேவியைத் திருவைத் தீண்டி வெய்யவன் கொன்றான் என்றால் வேதனை உழப்பது இன்னும் உய்யவோ! கருணையாலோ, தருமத்தோடு உறவும் உண்டோ?’’ என்று இலக்குவன் இன்னும் நீ வேதனையுடன் வருந்திக் கிடப்பதா இனி கருணை தேவையில்லை, தர்மத்தைப் பார்க்க வேண்டியதில்லை. 'அங்கம் இவ் அறமே நோக்கி அரசு இழந்து, அடவி எய்தி மங்கையை வஞ்சன் பற்ற, வரம்பு அழியாது வாழ்ந்தேம்! இங்கும் இத்துன்பம் எய்தி, இருந்து மேல், எளிமை நோக்கிப் பொங்குவன் தளையில் பூட்டி ஆள் செயப்புகல்வர் அன்றோ?” சும்மா இருக்க வேண்டாம். உடனே இலங்கைக்குள் புகுந்து அதைப் பொடியாக்கி அரக்கன் போன திக்கெலாம் சுட்டும் பொசுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் பேசினான். அப்போது சுக்கிரீவன் நான் இராவணனைப் பழி வாங்குவேன்,” என்று இலங்கை மீது பாயத் தொடங்கினான். அப்போது மாருதி இந்திரசித்தன் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டதைப் பற்றிக் கூறினான். அதைக் கேட்ட இராமன் மேலும் வருந்தினான். சீதையோடு என் தீமை தீரவில்லை. வேரொடும் முடிப்பதாக விளைந்துள்ளது. இன்னும் யாரொடு தொடரும் எனத் தெரியவில்லை.