பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 'பணிமலர்த் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கு ಪಷಿಸಿ தனி முதல்தலைவன் ஆனாய்; உன்னை வந்து அமரர் தாழ்வார்; மனிதருக்கு அடிமையாய் நீ இராவணன் செல்வம் ஆழ்வாய்; இனி உனக்கு என்னோ மானம்? எங்களோடு அடங்கிற்று அன்றே? என்று ஏசினான். வீடணன் அதனை மறுத்து 'அறம் துணை ஆவது அல்லால், அருநரகு அமைய நல்கும் மறம் துணையாக மாயாப் பழியொடும் நான் வாழ மாட்டேன்! துறந்திலேன் மெய்ம்மை; பொய்ம்மை உம்மையே துறப்பது அல்லால், பிறந்திலேன் இலங்கை வேந்தன் பின், அவன் பிழைத்த போதே' என்றும், 'உண்டிலேன் நறவம்; பொய்ம்மை உரைத்திலேன்; வலியால் ஒன்றும் கொண்டிலேன்; மாய வஞ்சம் குறித்திலென்; யாரும் குற்றம் காண்டிலர் என்பால்; உண்டோ? நீயிரும் காண்டிர் அன்றே! பெண்டிரின் திறம் பினாரைத் துறந்தது பிழையிற்றாமோ?’’ என்றும் “மூவகை உலகம் ஏத்தும் முதல்வன் எவர்க்கும் மூத்த தேவர் தம்தேவன், தேவி, கற்பினில் சிறந்து ளாளை நோவன செய்தல்தீது என்று உரைப்ப, நுன் தாதை சீறிப் போ, வென உரைக்கப் போந்தேன்; நரகதில் பொருந்து வேனோ?” என்றும் சரிக்கு சரியாக வீடணன் இந்திரசித்தனுக்கு பதில் கூறினான்.