பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 197 'முன்னையோர் இறந்தோர் எல்லாம் இப்பகை முடிப்பர் என்றும் பின்னையோர் நின்றார் எல்லாம் வென்று அவர்ப் பெயர்வர் என்றும் உன்னை, நீ அவரை வென்று தருதி என்று உணர்தும் அன்றால், என்னையே நோக்கி யான் இந் நெடும்பகை தேடிக் கெண்டேன்’ 'பேதமை உரைத்தாய் பிள்ளாய் ! உலகெலாம் பெயரப் பேராக் காதை என்புகழி னோடும் நிலைபெற அமரர் காண மிதெழு மொக்குள் அன்ன யாக்கையை விடுவது அல்லால் சீதையை விடுவது உண்டோ? இருபது திண் தோள் உண்டால்” 'வென்றிலேன் என்ற போதும், வேதம் உள்ளளவும் யானும் நின்றுளேன் அன்றோ, மற்ற இராமன் பேர் நிற்கும் ஆயின் பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத்து அன்றோ? இன்றுளார் நாளை மாள்வார்; புகழுக்கும் இறுதியுண்டோ?” என்று இராவணன் மேகநாதனிடம் கூறி நீ ஒய்வு எடுத்துக் கொள். நான் போருக்குச் செல்கிறேன் என்று கூறி முடித்தான். இங்கு இராவணனுடைய கம்பீரத்தின் அவனுடைய தனியாண்மையின் உச்சமாக சீதையின் மீதான பெருங்காதல் மேலோங்கி நிற்பதைக் காண்கிறோம். இங்கு இரு முக்கியமான வாசகங்கள் கம்பநடார் கவிதைகளில் வருவதைக் காண்கிறோம். 'யாக்கையை விடுவதல்லால் சீதையை விடுவதுண்டோ? என்றும் வென்றிலேன் என்ற போதும் வேதம் உள்ளளவும் இராமன் பேர் நிற்குமாயின் என் பேரும் நிற்கும் மன்றோ? என்று இராவணன் கூறுவது அவனுடைய உறுதிமிக்க இறுதியான மனோ நிலையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. 輯。」輯。」軒 *్మ* *్మ* *** 31. இந்திரசித்தனின் இறுதிப்போர் இந்திரசித்தன் தனது தந்தையின் சொற்களைக் கேட்ட பின்னர் 'எந்தாய் ஒழிந்தருள் சீற்றம் யான் சொன்ன உறுதிகளைப் பொறுத் தருள்வாய் யான் களத்திற்குச் செல்கிறேன் என்று கூறி தெய்வத் தேர் மீது ஏறினான். +