பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 208 حجدلإعلا - காதலும் பெருங்காதலும் “காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேரழகும், அவர்தம் கற்பும் ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும் வேந்தர் பிரான் தயரதனார் பணி தன்னால் வெங்கானில் விரதம் பூண்டு போந்ததுவும், கடைமுறையே புரந்தானார் பெருந்தவ மாய்ப் போயிற்றம்மா’’ என்றும், 'அறை கடையிட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் பேரறிஞர்க்கேயும் உரை கடையிட்டு அளப்பரிய பேராற்றல் தோள் ஆற்றற்கு உலப் போ இல்லை; திரை கடையிட்டு அளப்பரிய வரம் என்னும் பாற்கடரைச் சீதை என்னும் பிரை கடையிட்டு அழிப்பதனை அறிந்தேனோ தவப்பயன் நின் பெருமை பார்ப்பேன்’ “என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து அவன் பொன் தழைத்த பொரு அறு மார்பினைத் தன் தழைக் கைகளால் தழுவித் தனி நின்றழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள்' இவ்வாறு மண்டோதரி அழுது புலம்பி தனது கணவன் உடல் மீது விழுந்து அவனைத் தழுவி உயிா விட்டாள் என்பதைக் கம்பன் மிகுந்த அவலச் சுவையுடன் குறிப்பிட்டுக் கூறுகிறார். இப்பாடல்களில் எல்லாம் இராவணனுடைய பெருங்காதல் நோய் பற்றி எடுத்துக் கூறப் படுவதைக் காண்கிறோம். இராவணன் பேரரசனாக இருந்தவன். அவனிடம் எத்தனையோசிறப்புகள் இருந்தன. இந்திரற்கு இந்திரன் எழுதல்