பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 211 “பெண்மையும், பெருமையும் பிறப்பும், கற்பு எனும் திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும் உண்மையும் நீ ஒருத்தி தோன்றலால் வண்மையில் மன்னவன் புகழின் மாய்ந்ததால்” எனவே நான் என்ன கூறுவது? ஒன்று நீ சாக வேண்டும் அல்லது தக்கது ஒரு நெறியில் போவாயாக’ என்று கூறினான். இராமனுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதும்.அனைவரும் வருத்தமடைந்தனர். கலங்கினர். அப்போது சீதை சீறினாள். “எத்தவம், எந்நலம், என்றன் கற்பு, நான் இத்தனை காலமும் உழந்த ஈதெலாம் பித்து எனலாய், அறம் பிழைத்தலால், அன்றே உத்தம நீ மனத்து உணர்ந்திலாமை யால்' "பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும் சங்குகைத் தாங்கிய தரும மூர்த்தியும் அங்கையின் நெல்லி போல் அனைத்து நோக்கினும் மங்கையர் மன நிலை உணரவல்லரோ?” இங்கு ஒரு முக்கியமான உண்மை எடுத்துக் கூறப்படு ' கிறது. பிரம்மா, சிவன், திருமால் . ஆகிய மு ம மூர்த்தி . நிலையை உணர வல்லார்களாக இல்லை என்று சீதை கூறுவது, ! கம்பன் காட்டும் சிறந்த மிகச் : சிறந்தக் கருத்தாகும். இங்கு S பெண்ணின் பெருமையைக் கம்பன் உணர்த்துகிறார். so ■ இராமன் வனம் செல்வதற்குப் புறப்பட்டதைக் குறிப்பிட்ட போது "தையல் தன்கற்பும், தன்தகவும் தம்பியும் மையறு கருணையும், உணர்வும், வாய்மையும் செய்யதன் வில்லுமே சேமம் ஆகக் கொண்டு ஐயனும் போயினான் அல்லின் நாப்பணே