பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 221 துறையின் நீங்கிய அறமும், தொல்லையோர் முறையின் நீங்கிய அரசும் முந்துமோ?” என்று பதில் கூறுகிறான். இதில் நிறை (கற்பு) நிறைந்த சிறந்த மகளிர் நீர்மை முதலிடம் பெற்று சிறந்த தவம், அறம், அரசு ஆகியவற்றிற்கு ஈடாகக் குறிப்பிடப்படுகிறது. இன்னும் உந்தை தீமையும் உலகுறாத நோய் தந்த தீவினைத் தாய் செய்த தீமையும்’ என்றும் பரதன் கூறுகிறான். இராம இலக்குவர்களின் பயணத்தில் வழியில் ஒரு இடத்தில் சடாயுவை சந்தித்தனர். அப்போது சடாயு இவர்கள் காட்டிற்கு வந்ததன் காரணத்தைக் கேட்ட போது இலக்குவன் தன் சிற்றவை மாதரால் வந்த செய்கை’ என்று குறிப்பிட்டு நடந்த செய்திகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். சூர்ப்பனகை தேன்றினாள் கம்ப நாடருடைய மகா காவியத்தில் சூர்ப்பனகையின் தோற்றமும் அவளுடைய செயல்களைப் பற்றிய செய்திகளும் மிக முக்கியமான கட்டமும் திருப்பமுமாகும். சூர்ப்பனகையை பற்றிக் கூறும் போது அவளைக் காம வல்லியாம் கன்னியாகக் கம்பன் காட்டுகிறார். 'நீல மாமணி நிருதர் வேந்தனை மூல நாசம் பெற, முடிக்கும் மொய்ம்பினாள் மேலை நாள் உயிரோடும் பிறந்து தான்விளை காலம் ஒர்ந்து உடன்உறை கடிய நோயனாள்' என்றும் தான் விளை காலம் ஒர்ந்து உடன் உறை கடிய நோயனாள்’’ என்றும் - "வெய்ய தோர் காரணம் உண்மை மேயினாள் வைகலும் தமியள் அவ்வனத்து வைகுவாள் நெய்தின் இவ்வுலகெலாம் நுழையும் நோன்மையாள் எய்தினள் இராகவன் இருந்த சூழல்வாய்” என்றும் தன்கிளைக்கு இறுதி காட்டுவாள்' என்றும் கம்பன் குறிப்பிடுகிறார்.