பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 224 تحجدلإج காதலும் பெருங்காதலும் “தாம் உறு காமத்தன்மை, தாங்கள் நேர் உரைப்பது என்பது ஆம் எனல் ஆவது அன்றால் அரும்குல மகளிர்க்கு அ. ம்மா! ஏமுறும் உயிர்க்கு நோவேன்! என் செய்கேன்! யாரும்இல்லேன்! காமன் என்று ஒருவன் செய்யும் வன்மையைக் காத்தி’ என்றாள்” என்று தன் உணர்வை வெளிப்படுத்துகிறாள். அதைக் கேட்ட இராமன் தன்னுள் நகைத்து நாண் இலள் ஐயள், (சந்தேகத்துக்குடையவள்) நொய்யள் நல்லளும் அல்லள்’ என்று தனக்குள் கருதுகிறான். அதன் பின்னர் இருவருக்குமிடையில் நடைபெற்ற சிறிய உரையாடலுக்குப் பின்னர் “இளையவன் வந்தால் கோபப்படுவான், நங்கையே இந்த இடத்தை நீ விட்டுப் போய்விடு' என்று கூறி விட்டு இராமன் சீதையுடன் தன் பர்ண சாலைக்குள் போய் விட்டான். சூர்ப்பனகை "அழிந்த சிந்தையளாய் அயர்வாள் வயின் மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால் வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று இழிந்த கார்விடம் ஏறுவது என்னவே’’ என்றும் அவளுடைய பெருங்காம உணர்வின் காரணமாக “வெந்து காந்த வெதும்புறு மேனியாள்’ என்றும் “நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள்' என்றும் “ஆவி ஒயினும் ஆசை ஒய்விலாள்' என்றும் அவளுடைய வேகமான காம உணர்வை கம்பநாடர் தனது கவிதைகளில் வடித்துக் காட்டுகிறார். ‘வஞ்சனைக் கொடு மாயைவளர்க்கும் என் நெஞ்சுபுக்கு எனது ஆவத்தை நீக்கு எனும்; அஞ்சனக் கிரியே அருளாய் எனும் நஞ்சு நக்கினர் போல நடுங்குவாள்'