பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 249 'வலங்கொடு தீயை வணங்கினர் வந்து பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி இலங்கொளி அம்மி மிதித்து, எதிர் நின்ற கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்” என்று கம்பர் குறிப்பிடுகிறார். இராமனுக்குப் பட்டம்? கன்னியருக்கு கற்பு பெருமை தருகிறது. அதே போல நாட்டிற்குப் பெருமை தருவது அந் நாட்டை ஆளும் அரசன் தருமத்தைக் காத்து நாட்டு மக்களுக்குரிய நன்மைகள் செய்வதாகும். நான் அதையெல்லாம் செய்து முடித்துவிட்டேன். இனி என் உயிருக்குப் பொருந்திய நன்மைகளைச் செய்து வீடு பேறு அடைய விரும்புகிறேன். என்று தசரதச் சக்கர வர்த்தித் தனது அமைச்சர்களிடம் கூறுவதை 'கன்னியர்க்கு அமைவரும் கற்பின் மாநிலம் தன்னை இத்தகை தரத் தருமம் கை தர மன் உயிர்க்கு உறுவதே செய்து வைகினேன்; என் உயிர்க்கதி உறுவதும் செய்ய எண்ணினேன்’’ என்று கம்பன் குறிப்பிடுகிறார். இங்கு அரசரின் நல்லாட்சிக்கு மங்கையரின் கற்பு நிலை ஒப்பிடப்படுகிறது. இராமனுக்கு முடி சூட்டுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. அக் காட்சியின் போது கொடுமனக் கூனி தோன்றினாள். கைகேயின் உள்ளத்தில் கோள் மூட்டி விட ஒடினாள், அப்போது கைகேயி துங்கிக் கொண்டிருந்தாள். மந்தரை அவளை எழுப்பினாள். அரைத் துக்கத்தில் இருந்த கைகேயியிடம் அவள் பேசத் தொடங்கினாள். அவ்வாறு அரைத் துக்கத்திலிருந்த கைகேயியைக் குறிப்பிடும் போது கம்பர் அவளை 'தெய்வக் கற்பினாள்’ என்று குறிப்பிடுகிறார். “தீண்டலும் உணர்ந்த அத் தெய்வக் கற்பினாள் நீண்ட கண் அனந்தரும் நீங்குகிற்றிலள்’’ என்பது கவிதை வரிகளாகும். கைகேயி இயல்பில் நல்லவள். துயவள், எனவே தெய்வக் கற்பினாள் என்று கவிஞர் குறிப்பிடுகிறார். இராமன் முடி சூட்டு விழா பற்றிக் கேள்விப்பட்டு அயோத்தி மக்கள் எல்லாம் மகிழ்ச்சியடைந்தனர். விடிந்ததும் விழாவைக்