பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 255 குற்றுயிராகக் கீழே விழுந்தான். சீதை சோர்வடைந்துப் பலவாறாகப் புலம்பினாள். “கற்பழியாமை என் கடமை, ஆயினும் பொற்பழியா வலம் பொருந்தும் போர்வலான் விற்பழியுண்டது; வினையினேன் வந்த இற்பழியுண்டது; என்று இரங்கி ஏங்கினாள்” என்றும், 'விண்ணிடை வெய்யவன் ஏரும் வேகத்தால் கண்ணொடு, மனம் அவை சுழன்ற கற்பினாள் உள்நிறை உணர்வழிந்து ஒன்றும் ஒர்ந்திலள் மண்ணிடைத் தன்னையும் மறந்து சாம்பினாள்' என்றும் கம்பன் குறிப்பிடுகிறார். சடாயுவின் துயரம் இராவணன் சீதையைக் கொண்டு சென்று விட்டான். சடாயு தன்னால் அதைத் தடுக்க முடியவில்லையே என்றுக் கலக்கம் கொண்டான். மைந்தர்கள் வந்திலர். மருகிக்கு ஏற்பட்ட துன்பத்தை என்னால் துடைக்க முடியாமல் போய் விட்டது. இனி என்ன நடக்குமோ? இராம இலக்குவர்கள் உயிரோடு இருந்திருந்தால் இவளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? சிற்றவை வஞ்சனை முடியச் செய்ததோ? என்றெல்லாம் பலவாறு எண்ணினான்’ என்றும் “பருஞ்சு இறை இன்னன பன்னி, உன்னுவான் அருஞ் சிறை உற்றனள் ஆம் எனா மனம் பொரும் சிறை அற்ற தேல், பூவை கற்பெனும் இரும் சிறை அறாது என இடரின் நீங்கினான்’ என்று கம்பன் குறிப்பிடுகிறார். சீதையைத் தேடி! இராமனும் இலக்குவனும் மாரீசன் கொடுத்தக் குரல் மோசடியானது என்பதை உணர்ந்தனர். சீதை இருந்த இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தனர். அங்கு அவளைக் காணவில்லை. மனம் கலங்கினார்கள். தேர்ச் சக்கரம் பதிந்து சென்ற அடையாளங்களைக் கண்டு தெற்கு நோக்கிச் சென்றார்கள். கீழே கிடந்த வீணைக்