பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சி ■ அ.சீனிவாசன் 259 “தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும் இருமையும் தெரிந்து எண்ணலை, எண்ணினால் அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ? என்று வாலியிடம் இராமன் கேட்கிறான். வாலி அதற்கு பதிலளித்து 'ஐய! நுங்கள் அருங்குலக் கற்பின் அப் பொய்யில் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல் செய்திலன், எமைத் தேமலர் மேலவன்; எய்தின் எய்தியதாக இயற்றினன்’’ எனறும. “மணமும் இல்லை மறை நெறி வந்தன; குணமும் இல்லைக் குலமுதற்கு ஒத்தன; உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கலால் நினமும் நெய்யும் இணங்கிய நேமியாய்” என்றும் கூறுகிறான். வாலி கூறிய கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இராமன், 'தக்க இன்ன, தகாதன இன்ன என்று ஒக்க உன்னலர் ஆயின், உயர்ந்துள மக்களும் விலங்கே, மனுவின் நெறி புக்க வேல், அவ்விலங்கும் புத்தேளிரே' என்றும், “சினையது ஆதலின், எக்குலத்து யாவர்க்கும் வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும் அனைய தன்மை அறிந்தும் அழித்தனை மனையின் மாட்சி என்றான் மனு நீதியான்' என்று கூறுகிறான். இராமனுடைய இந்த வாசகங்களையும் இலக்குவனுடைய அடுத்த விளக்கத்தையும் பதிலையும் கேட்டு வாலி ஆவி போம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்’ என்று கூறி அமைதியானான்.