பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் 2Ꮾ3 அனுமன் சீதையிடம் தாயே தங்களைச் சுமந்து கொண்டு போய் நாயகனிடம் சேர்க்கிறேன்’ என்று கூறுகிறான். அதை மறுத்த சீதை. “கொண்ட போரின் எம் கொற்றவன் வில் தொழில் அண்டர் ஏவரும் நோக்க, என் ஆக்கையைக் கண்ட வாள் அரக்கன் விழிக் காகங்கள் உண்ட போதன்றி, யான் உளென் ஆவனோ?” எனறும, 'பொன்யிறங்கல் இலங்கை பொருந்தலர் என்பு மால் வரை ஆகிலதே எனின் இற்பிறப்பும் ஒழுக்கும் இழுக்கம் இல் கற்பும் யான் பிறர்க்கு எங்ங்ணம் காட்டுகேன்?” என்றும், 'அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ, எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன், அது தூயவன் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று வீசினேன்' என்றும் கூறுகிறாள். அனுமனும் நன்றெனக் கூறி இராமனுக்குச் சொல்ல வேண்டிய செய்திகள் என்ன வென்று கேட்டான். அப்போது சீதை சற்று மனம் நொந்து பலவாறு கூறியும், “வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய் இந்தப் பிறவிக்கு, இரு மாதரைச் சிந்ததையாலும் தொடேன்; என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய்' என்றும், "ஈண்டு நான் இருந்து இன் உயிர் மாயினும் மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத் தீண்டல் ஆவது ஒர் தீவினை தீர்வரம் வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்' என்றும் கூறினாள். சீதை அலுத்துக் கொண்டதற்கு ஆறுதல் கூறி அனுமன்,