பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் 264 'கைத்தோடும் சிறை, கற்போயை வைத்தோன், இன்னுயிர் வாழ்வானாம்! பொய்த்து ஓர் வில்லிகள் போவாராம்! இத்தோடு ஒப்பது யாது உண்டோ?” என்றும், “பூண்டாள், கற்புடையாள் பொய்யாள், தீண்டா வஞ்சகர் தீண்டா முன் மாண்டாள், என்று மனம் தேறி மீண்டால் வீரம் விளங்காதோ?” என்றும் எடுத்துக் கூறித் தாங்கள் கவலைப்பட வேண்டாம் நான் போய் இராமபிரானிடம் செய்தியைக் கூற வேண்டியது தான் தாமதம் கடலைத் துர்த்து இலங்கையைச் சூழ்ந்து மாகுரங்குப்படை ஆர்ப்பரிப்பதைக் கேட்பீர்கள், அன்னையே என்று கூறித் தான் சீதையிடம் வந்து போன அடையாளமாகச் சூடாமணியைப் பெற்றுக் கொண்டு அன்னையிடமிருந்து விடை பெற்று கொண்டான். இலங்கை எரியுண்டது சீதையைச் சந்தித்து விட்டுத் திரும்பிய அனுமன் தான் வந்து போன தன் அடையாளமாக ஒரு பெரிய செயலைச் செய்ய வேண்டும் என்று கருதினான். சேட்டைகளைத் தொடங்கினான். சோலைகளைச் சிதைத்தான். மரம் செடி கொடிகளை ஒடித்தான். காய்கனிகளைப் பறித்து எரிந்தான். இதைக் கேள்வியுற்று இராவணன் சில அரக்க வீரர்களை அனுப்பி அனுமக் குரங்கைப் பிடித்து வரச் சொன்னான். தன்னைப் பிடிக்க வந்த அரக்க வீரர்களையெல்லாம் அனுமன் அடித்துக் கொன்றான். தன்னுடன் போர் செய்ய வந்த கிங்கரர்களை எல்லாம் வதைத்தான். சம்பு மாலியைக் கொனறான். பஞ்ச சேனாபதிகளை வதைத்தான் அட்சயகுமாரனை எதிர்த்துப் போரிட்டு அவனைக் கொன்றான். தன் தம்பியை அனுமன் கொன்றான் என்பதைக் கேள்வியுற்ற இந்திரசித்தன் தன் படைகளுடன் அனுமனை எதிர்க்கப் புறப்பட்டான். மேகநாதனைக் கண்ட அனுமன்,