பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 278 ->==== காதலும் பெருங்காதலும் “யான் இவண் இருந்த தன்மை இமையவர் குழுவும் எங்கள் கோனும், அம்முனிவர் தங்கள் கூட்டமும், குலத்துக்கு ஏற்ற வான் உயர் கற்பின் மாதர் ஈட்டமும் காண்டல் மாட்சி மேல் நினை கோலம் கோடல் விழுமியது அன்று; வீர' என்று கூறினாள். இராமன் கூறிய எனது பணியின் குறிப்பு “தங்களை சீரோடு அழைத்து வருமாறு’ என்று வீடணன் மீண்டும் கூறினான். சீதையும் நன்று என்று கூறினாள். காணியைப் பெண்மைக் கெல்லாம் கற்பினுக்கு அணியை, பொற்பின் * ஆணியை, அமிழ்தின் வந்த அமிழ்தினை; அறத்தின் தாயைச் சேண் உயர் மறையை எல்லாம் முறை செய்த செல்வன் என்ன வேணியை அரம்பை மெல்ல விரல் முறை சுகிர்ந்து விட்டாள்' என்று கம்பன் மிக உருக்கமாகக் குறிப்பிடுகிறார். சீதை இராமனைக் காணச் செல்லுதல் சீதையை அழைத்துச் சென்றதை “அருங்குலக் கற்பினுக்கு அணியை அண்மினார் மருங்குபின் முன்செல வழியின்று என்னலாய் நெருங்கினர்; நெருங்குழி, நிருதர் ஒச்சலால் கரும்கடல் முழக்கெனப் பிறந்த கம்பலை’ என்று கம்பர் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். சீதை இராமனைக் காணுதல் இராமன் சீதையைக் காண்கிறான்