பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.சீனிவாசன் W தமிழகத்தைப் பொருத்த வரை, பெரும்பாலும், தமிழ்ச் சான்றோர்கள், ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள், வள்ளல் பெருமக்கள் நல்ல உள்ளமும் வசதியும் பெற்றுள்ள பொது மக்கள் முதலிய பலரின் முயற்சி களாலும் நமது ப்ெரும் புலவர்கள், கம்பர், வள்ளுவர், இளங்கோவடிகள், சேக்கிழார், ஆழ்வார்கள், நாயன்மார்கள், வள்ளலார் மகாகவி பாரதி பாவேந்தர் பாரதி தாசன் முதலிய பல பெரும் புலவர்களின் பெயரால் மன்றங்கள், கழகங்கள் அமைத்தும், ஆய்வு மையங்கள் நடத்தியும் விழாக்கள் எடுத்து பல நல்ல காளியங்கள் செய்து வருகிறார்கள். இந்தப் பணிகள் மேலும் விரிவு பட வேண்டும். கம்பருடைய இராமாயணம் பல பரிமாணங்களையும் கொண்ட மிகச் சிறப்பான பெரிய நூலாகும். கம்பராமாயணத்தின் பாத்திரப் படைப்பு, இராமாவதாரத்தின் தனிச்சிறப்புகள் கம்பனின் கடவுட் கொள்கை, தத்துவ ஞானம், சகோதரத்வம், சகோதர உறவுகள், மானுடம் பற்றிய பார்வை, அரசியல், ஆட்சி முறை, போர் முறைகள், தமிழ் மொழி, அறம், விதிவலி, அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் உறுதிப்பாடு, காதல், பெண்ணாசை, பெண்ணாட்டம், பெருங்காதல், போர், போர் உத்திகள் மற்றும் பல சமுதாயப் பிரச்சனைகளும் சமுதாயப் பழக்க வழக்கங்களும் இப்பொருள்கள் பற்றிய கம்பனுடைய கருத்துக்கள் பலவும் எக்காலத்திற்கும் பொருந்துவனவாகவும் உள்ளன. மனிதர்களுக்குள் மானிடர், வானரர், இராக்கதர், மற்றும் இதர ஜீவராசிகளும் பறவைகள் விலங்குகள் ஆகியவற்றின் செயல்பாடுகள், தமிழ்ப் பண்பாடுகள் கூடிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலப் பிரிவுகள் அவைகளின் தனிப் பண்புகள் முதலியவை பற்றிய பல நுட்பங்களையும் விவரங்களையும் மக்கள் மாண்புகளையும் பற்றி கம்பனுடைய மகாகாவியத்தில் காணலாம். தமிழ் மொழியின் சிறப்பு, காவிய அமைப்பு, கவிதை நயம், விருத்தப் பாக்களின் தனியாண்மை முதலிய பல சிறப்புகளையும் கம்பனில் காணலாம். o கம்பனுடைய இராமன் திருமால் அவதாரம் சீதாபிராட்டி, இலக்குமியின் அவதாரம் இலக்குவன் ஆதி சேடனின் அம்சம். அனுமன் வாயு புத்திரன், வானரர்கள் எல்லாம் தேவர்கள். இராவணனும் கும்பகருணனும் துவாரபாலகர்களின் பிறப்பு. இவ்வாறான தெய்வீகத் தன்மை கொண்ட ஒரு மகா காவியமாகக் கம்பர் இந்தப் பெருங் காவியத்தைப் படைத்துள்ளார்.