பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் | Հ(, இராமனும் சீதையும் இலக்குவனும் வனத்திற்குப் புறப்பட்டனர். சுமந்திரன் அவர்களைத் தேரில் ஏற்றி நகர எல்லைக்கப்பால் கொண்டு போய் விட்டுவிட்டு விடை பெற்றான். இலக்குவனுக்கு மனக் கொதிப்பு அடங்கவில்லை. இராமனுடைய தவ வேடநிலை கண்டு அவனுக்கு பரதன் மீதுதான் அதிகமான கோபம் ஏற்பட்டது. சுமந்திரன் விடைபெற்றுக் கொண்ட போது கூட, ‘மின்னுடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு என் மன்னுடன் பிறந்தி லென் மண் கொண்டு ஆள்கின்றான் தன்னுடன் பிறந்தி லென் தம்பி முன்னலென் என்னுடன் பிறந்த யான் வலியன் என்றியால்” என்று மனக் கொதிப்புடன் இலக்குவன் சுமந்திரனிடம் பரதனுடன் நாங்கள் யாரும் பிறக்கவில்லை என்று கூறிவிடு என்பது போலச் சொல்லி விட்டான். இந்தச் சுடு சொற்களைக் கேட்ட இராமன் மனம் வருந்தி இலக்குவனைப் பரிவுடன் பார்த்து “ஆரியன் இளவலை நோக்கி ஐய இச் சீரிய அல்லன செப்பல் என்ற பின் பாரிடை வணங்கினன் பரியும் நெஞ்சினன் தேரிடை வித்தகன் சேறல் மேயினான்” என்று இராமன் இலக்குவனிடம் “ஐய இச்சீரிய அல்லன செப்பல் - சீரியன அல்லாத சொற்களைச் சொல்லாதே’ எனக் கூறியவுடன் அவன் அமைதியாகிறான். பக்திமேலிட்டால் இராமனை எதிர்த்து இலக்குவன் எதுவும் பேசுவதில்லை. இராமன் பின்னே தொடர்ந்து செல்பவன் இலக்குவன். அண்ணன் இட்டகட்டளையை அப்படியே அமைதியாக நிறைவேற்றுபவன். பாசத்தால் அன்பின் கட்டளையால் பிணைக்கப்பட்டவன். பக்தியால் வழி பட்டு நிற்பவன். இராமாயணக்கதையில் உள்ள இலக்குவனை இளைய பெருமாள் என்று வைணவர்கள் போற்றுவார்கள். இலக்குவனுக்கு இராமானுஜன் என்னும் பெயரும் பிரபலமானதாகும். இலக்குவன்