பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு_சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் 165 இங்கு இராமன் மீது குகன் கொண்டுள்ள பக்தி, தோழமை, சகோதர உணர்வு ஆகியவை சிறப்பாக எடுத்துக் காட்டப்படுகிறது. அத்துடன் “மன்னவர் நெஞ்சினில் வேடர் விடும் சரம் வாயாவோ”, என்னும் ஒரு ஆழ்ந்த சமுதாயக் கருத்தும் பேசப்படுவது கவனிக்கத்தக்கதாகும். முன்னர் பரதன் மீது கோபமும் ஆத்திரமும் கொண்ட குகன் பின்னர் உண்மையை உணர்ந்து தெளிவடைகிறான். அவனுடைய பழய கருத்துக்கள் மாறிப் பரதனைப் புகழத் தொடங்குகிறான். இந்த மாற்றத்தை நாடகக் காட்சி போல மிக அருமையாகக் கம்பன் எடுத்துக் கூறுவதைக் காணலாம். வட கரையில் நிற்கும் பரதனிடம் தென் கரையில் நிற்கும் குக:ைஈப பற்றித் தேரோட்டுவதில் வல்லவனான சுமந்திரன் எடுத்துக் கூறுகிறான். இங்கு சுமந்திரன் மூலமாக இராமன் குகன் நட்பு, அதன் சிறப்பு பற்றி எடுத்துக் கூறப்படுகிறது.

  • கங்கையிரு கரையுடையான் * கணக்கிறந்த நாவாயான் * உங்கள் குலத்தனி நாதற்கு உயிர்த்துணைவன் * உயர்த் தோளான் * வெம்கரியின் ஏறனையான் * விற்பிடித்த வேலையினான் * கொங்கலரும் நறும் தண்தார்க் குகன்

என்னும் குறியுடையான் * கல்காணும் திண்மையான் * கரைகாணாக் காதலான்

  • அல்கு ஆணி கண்டனைய அழகமைந்த மேனியான்
  • மல்காணும் திருநெடுந்தோள் மழை காணும் மணி நிறத்தோய்,

நின் காணும் உள்ளத்தான் நெறி எதிர் நின்றனன்” என்று குகனைப் பற்றி விரிவுபடச் சுமந்திரன் பரதனிடம் எடுத்துக் க. கிைறான்.