பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 180 என்று கம்பன் கவிதை குறிப்பிடுகிறது. கோசிகனது வேள்வி முடிந்த பின்னர், அவருடன் அரச குமாரர்கள் இருவரும் மிதிலை சென்றனர். வழி நெடுகிலும் பல காட்சிகளைக் கண்டனர். பலநிகழ்ச்சிகளில் பங்கு கொண்டனர். இராமன் சிவதனுசை வளைத்து ஒடித்தான். இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிச்சயமாயிற்று. அத்துடன் சேர்ந்து இதர மூன்று சகோதரர்களுக்கும் திருமண ஏற்பாடாயிற்று. தசரதனும் சுற்றமும் படையும் பரிவாரங்களும் சூழ மிதிலை நகர் வந்து சேர்ந்தனர். இராமன் ஒரு தேரின் மீதேறி மிதிலை நகர வீதிகளில் வந்தான்.அவனைச் சூழ்ந்து அவனது தம்பிமார்கள் குதிரை மீதேறி உடன் வந்தனர். திருமண நாளும் நேரமும் குறிக்கப்பட்டு இராமனுக்கும் தம்பிகள் மூவருக்கும் சிறப்புறத் திருமணம் நடந்தேறியது. மணம் முடித்து அனைவரும் அயோத்தி திரும்பினர். பரதனும் சத்துருக்கனனும் கேகய நாட்டிற்குச் சென்று விட்டனர். இராமனுக்கு முடிசூட்டுவதற்கு முடிவு செய்து தசரதன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். முடி சூட்டுவதற்கான நாளும் நேரமும் குறிக்கப் பட்டது. ஆயினும் முடி சூட்டு விழா கூனியின் சூழ்ச்சியால் தடைப்பட்டது. பரதனுக்கு நாடும் இராமனுக்குக் காடும் என்று ஆகிவிட்டது. - இராமன் வனம் செல்லத் தயாரானான். இதைக் கேள்வியுற்ற இலக்குவன் கடுஞ்சினம் கொண்டான். சீறினான். இலக்குவனை ஆதிசேடனின் அம்சம் எனக் கூறுவர். அந்த ஆதிநாகத்தின் சீற்றம் இலக்குவனுக்கு அடிக்கடி ஏற்படும். இராமன் தலையிடும்போது அந்தச் சீற்றம் தணியும், அடங்கும். இலக்குவனின் சீற்றத்தைப் பற்றிக் கம்பன் மிக அழகாகக் குறிப்பிடுவதைக் காணலாம். “கண்ணில் கடைத்தி உக, நெற்றியில் கற்றைநாற விண்ணில் சுடரும் கெட, மெய்யினின் நீர் விரிப்ப உள்நிற்கும் உயிர்ப்பு எனும் ஊதை பிறக்க நின்ற அண்ணல் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தி ஒத்தான்”