பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி ➢mpó சமுதாயப_பாவை-அ. சின் அரிசா А”. 1.3 கோதறு தம்பியும் விளியக்கோள் இலன் சீதையை உகந்துளான் என்பர் சீரியோர்” என்றெல்லாம் கூறி மனம் வருந்தி இராமன் உயிர் துறக்கத் துணிந்தான். சஞ்சீவி மலை வந்து விட்டது. அதில் பலவகையான அபூர்வமான மூலிகைச் செடிகள் இருந்தன. அதைக் கம்பன் விவரித்துக் கூறுகிறார். “சல்லியம் அகற்றுவது ஒன்று, சந்துகள் புல்லுறப் பொருத்துவது ஒன்று, போயின நல் உயிர் நல்குவது ஒன்று நல்நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய்” எத்தனை வகையான மருந்துச் செடிகள், அபூர்வமான மூலிகைகள், உடலில் புகுந்துள்ள ஆயுதங்களை நீக்கி ԼՈTTՃԱT புண்களையும் காயங்களையும் ஆற்றுவது ဒါ့ படுகாயங்களால் உடம்பில் பிளவுகள் ஏற்பட்டு கை தள்ல் மற்றும் முறிந்து போன இதர உறுப்புகளைத் திரும்பச் சேர்த்து பொருந்தும் படி) செய்வதற்கு ஒரு மருந்து, போன உயிரை திரும்பி வரச் செய்வதற்கு ஒரு மருந்து, உடம்பில் ஏற்பட்ட தழும்புகளையும், வெட்டு தழும்புகளையும் மாற்றி முன் போலவ்ே உடம்பைக் கொண்டு வருவதற்கான ஒரு மருந்து, என்றெல்லாம் அறுவை சிகிச்சை நிபுணரைப் போலக் கம்பன் மருந்து வகைகளைச் சுட்டிக் காட்டிக் குறிப்பிட்டிருப்பது மிகவும் சிறப்பான தொரு செய்தியாகும். இவ்வாறான மூலிகை மலை - மருத்துவ மலை வந்தவுடன் காற்றுப் பட்டவுடனே, அனைவரும் காயங்கள் ஆறி மாண்டவர் அனைவரும் உயிர் பெற்று எழுந்தனர். "ஓங்கிய தம்பியை உயிர் வந்து உள்ளுற வீங்கிய தோள்களால் தழுவி வெம்துயர் நீங்கினன் இராமனும் உலகின் நின்றில தீங்கு, உள தேவரும் மறுக்கம் தீர்ந்தனர்”