பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

¿¡. 5H, LI]LJĘTT|5IJT சகோதரதவமும అTఆ ... 14 இவ்வாறு உயிர் பெற்ற் தம்பியை இராமன் மன மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவிக் கொண்டன்தையும் தீங்குகள் எப்போதும் உலகில் நீண்டு கொண்டிருக்காது, அவை தாற்காலிக மானதே என்னும் உண்மையையும் கம்பன் மிக அழகாகத் தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார். இந்தக் காட்சியில் இராமனுடைய மிகச் சிறந்த சகோதர உள்ளத்தையும் நட்புள்ளத்தையும் மனித நேய உள்ளத்தையும் காண்கிறோம். இந்திர சித்தனுடன் போர் மிகவும் கடுமையான போது, அவன் மீது நான் முகன் படையைத் தொடுக்கலாம் என்று இலக்குவன் கூறிய போது மிகவும், அதிகமான அழிவை உண்டாக்கும் அப்படையை நாம் முதலில் தொடுக்க வேண்டாம் என்று கூறி இராமன் சிறந்த மனிதாபிமானத்தைக் காட்டினான். ஆனால் எதிரிகள் அப்படையை ஏவிக் கடும் சேதத்தை உண்டாக்கி விட்டனர், என்றெல்லாம் இராமன் கூறுவதைக் கம்பன் சிறப்பாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம். இராமன் கடுமையான துன்ப துயரங்களைத் தாங்கிப் புலம்பிக் கூறும் காட்சியைக் காண்கிறோம். கடைசியில் “உலகில் நின்றில தீங்கு” என்ற கம்பன் கூறும் மகா வாக்கியத்தையும் காண்கிறோம். சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து மாண்டோர் அனைவரையும் உயிர் பெற்று எழச் செய்த அனுமனைக் கட்டித் தழுவி இராமன் பாராட்டிப் புகழ்ந்தான். = 'அழியும் கால் தரும் உதவிக்கு ஐய னே! மொழியும் கால் தரும் உயிரும் முற்றுமே பழியும் காத்து அரும் பகையும் காத்து எமை வழியும் காத்தனை மறையும் காத்தனை” என்று அனைத்து உயிரையும் காத்து, எனக்கு வரவிருந்த பழியை நிக்கி, பகையை நீக்கி, எனது குலத்தையும் காத்து மறையையும் காத்தாய் என்று அனுமனைப் பாராட்டி இராமன் கூறுவதைக் கம்பன் மிகவும் சிறப்பாக உள்ளத்தின் அடி ஆழ உணர்வோடு எடுத்துக் காட்டுகிறார்.