பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம வேல் தானும் மற்றை நான்முகன் படையும் நாணத் தீமுகம் கதுவ ஒடிச் சென்று அவன் சிரத்தைத் தள்ளிப் பூ மழை வானோர் சிந்தப் பொலிந்தது அப்பகழிப்புத் தேன்” என்று இந்திரசித்தன் தோல்வியடைந்து போர்க்களத்தில் இலக்குவனுடைய கணையால் மாண்டது குறித்துக் கம்பன் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். இப்போரில் இலக்குவனுடைய சாதனை மகத்தானது. இராமன் தனது தம்பியைப் பாராட்டுகிறான். அத்துடன் இந்த மாபெரும் வெற்றிக்கு வீடணனுடைய பேருதவி மிக முக்கியமான காரணமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டு வீடணனையும் பாராடடினான. "கம்ப மதத்துக்களியா னைக் காவல் ஜனகன் பெற்றெடுத்த கொம்பும் என்பால் இனி வந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன் வம்பு செரிந்த மலர்கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில் தம்பியுடையான் பகையஞ்சான் என்னும் மாற்றம் தந்தனையால்” என்று இலக்குவனைப் பாராட்டிப் புகழ்ந்து அத்துடன் இத்தகைய மகத்தான வெற்றிக்கு வீடணன் செய்த பேருதவியையும் பாராட்டி, “ஆடவர் திலக, நின்னால் அன்று, இகல் அனுமன் என்னும் சேடனால் அன்று, வேறு ஒர் தெய்வத்தின் சிறப்பும் அன்று வீடணன் தந்தவென்றி, ஈது என விளம்பி மெய்ம்மை