பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கம்பனின் சகோதரத்வமும் சகோதரர்களும் 218 என்று இராமபிரான் இலக்குவனுக்கு அறிவுரை கூறி புதியவில், கவசம், அம்புக் கூடு ஆகியவைகளையும் புதிய பாதுகாப்பு, தற்காப்பு தாக்குதலுக்கான மந்திரங்களையும் கொடுத்தனுப்பினான். “ஆணி இவ்வுலகுக்கான ஆழியான் புறத்தின் ஆர்த்த து.ாணியும் கொடுத்து மற்றும் உறுதிகள் பலவும் சொல்லித் தானுவின் தோற்றத்தானைத் தழுவினன்' த ' のギ*~つ/ F ー/るヘエ7つー女zる* 多cをe/prンa多ーの.ーダーベータ多-*ア*「*** என்று கம்பன் குறிப்பிடுவதைக் காண்கிறோம். っアヘーナ・ク”タ நிகும்பலை யாகத்தின்போது இந்திரசித்தனுடைய அரக்கர் படையையும் யாகத்தையும் இலக்குவன் சிதைத்தான். “கால் எனக்கடு எனக்கலிங்கக் கம்மியர் நூல் என, உடல் பொறை தொடர்ந்த நோய் எனப் பால்உறு பிரை எனக் கலந்து பன்முறை வேல்உறு சேனையைத் துணித்து வீழ்த்தினான். வேகமான சூறைக் காற்றைப் போல கடுமையான நஞ்சுவிடம் ஏறுவதைப் போல துணி நெசவு நெய்பவர்களின் தறியும் நூலும் படும் பாட்டைப் போல, உடம்பாகிய சுமையைத் தொடர்ந்து வரும் நோயைப் போல சந்திரனின் பிறையைப் போல அல்லது பாலில் ஊற்றப் பட்ட பிரையைப் போலப் பல முறைத்தடுத்தும் அடித்தும் அம்பெய்தும் இராக்கதர் சேனையைத் துணித்து வீழ்த்தினான் என்று கம்பன் மிக அற்புதமான உவமைகளுடன் இலக்குவனுடைய போர்ச் சாதனைகளையும் சாகசங்களையும் குறிப்பிட்டு விளக்குகிறார். இந்திரசித்தன் நடத்திய மாயப் போர்களை முறியடித்து அவனுடைய தாழ்விலாமுப்படைகளான பிரம்மாஸ்திரம், சக்கராயுதம், பாசுபதம் ஆகிய சக்தி ஆயுதங்களையும் தடுத்து அவனுடைய தெய்வீகத் தேரையும் சிதைத்து, அவனைக்கீழே இறக்கி இலக்குவன் அவனுடைய சிரத்தைச் சீவி விட்டான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 'நேமியும் குலிச வேலும், நெற்றியின் நெருப்புக் கண்ணான்