பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப்-பார்வை-அ. சீனிவாசன் - 243 என்றெல்லாம் இராவணனுடைய பெருமைகளையும் உயர்வுகளையும் பற்றி இராவணத் துறவி சீதையிடம் கூறியதைக் கம்பன் தனது கவிதைகளில் விவரிக்கிறார். - இந்திரனுக்கு இந்திரன், எழுத்தில் அடங்காத அளவு, அழகு மிக்கவன், நான்முகன் மரபு வழியில் வந்தவன், மேல் உலகம் உள்பட எல்லா உலகங்களையும் அடக்கி ஆள்பவன். வேதங்கள் முழுவதையும் மிகவும் நுட்பமாகக் கற்றறிந்தவன். சிவபெருமான் இருக்கும் இமயத்தையே வேரோடு பெயர்க்கும் வல்லமை மிகுந்தவன், திசை யானைகளையும் எதிர்த்துப் பொடியாக்கும் திறன் உள்ளவன், பிரமதேவன் கொடுத்த வரமாக முடிவில்லாத வாழ் நாட்களை ஆயுள்ாகக் கொண்டவன், சிவபெருமான் கொடுத்த் பாசுபதப்_ப ஊக் கொண்டவன். வீரமிக்க தோள்களைக் -கொண்டவன், குணத்தில் சிறந்தவன், வெம்மையில்லா ஒழுக்கமுடையவன், விரிவான ஞானம் கொண்டவன், செம்மையானவன், மன்மதன் திகைக்கும் அளவில் அழகானவன், நாங்களெல்லாம் இறைவன் என்று போற்றுமளவில் பெருமை மிக்கவன் என்றெல்லாம் இராவணத்துறவி இராவணனுடைய பெருமைகளையும் சிறப்புகளையும் பற்றிக் கூறுவதைக் கம்பன் அப்பாடல்களில் குறிப்பிடுகிறார். இன்னும் வையம் தந்த மைந்தன் மகன் மைந்தன், ஐயன், வேதம் ஆயிரம் வல்லோன், அறிவாளன் என்று அரக்கியர் புகழும் சிறப்புடையவன் இன்னும் வென்றி என்று ஒன்று தான் அன்றி வேறு இலான்” என்று புகழ் படைத்தோன், நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான் (நினைத்த காரியம் எதையும் விடாப் பிடியாகச் செய்து முடிக்கும் உள்ளத்தின் உறுதி கொண்டவன்), “வெள்ளியம் கிரியினை விடையின் பாகனோடு அள்ளி விண்தொட எடுத்து ஆர்த்த ஆற்றலான், அயன் முதற் குலத்திற்குத் தலைவனாக இருப்பவன், ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்த அறிவு அமைந்தவன், தனியாண்மை கொண்டவன், போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங் கொடாப் போர்வீரன், தேவர்க்கும், திசைக்கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங்கண்மாற்கும், எவர்க்கும் வலியான், அறை கடையிட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுளும், பேரறிஞர்க்கேயும் உரை கடையிட்டு அளப்பரிய பேராற்றலும் தோள் ஆற்றலும் கொண்டவன்.