பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை-அ. சினிவாசன் 20-5 படைகளையெல்லாம் ஒன்று சேர்த்து அனுப்புவது தான் நாம் செய்ய வேண்டிய வேலையாகும்” என்று கும்பகருணன் கூறுகிறான். 'தஞ்சமும், தருமமும், தகவுமே அவர் நெஞ்சமும், கருமமும் உரையுமே, நெடு வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்ல நாம் உஞ்சுமோ? அதற்கொரு குறை உண்டாகுமோ?” “தையலை விட்டு அவன் சரணம் தாழ்ந்து நின் ஐ அறு தம்பியொடு அளவளாவுதல் உய்திறம் அன்று எனில் உளது வேறும் ஒர் செய்திறம் அன்னது தெரியக்கேட்டி, ஆல்” “பந்தியில் பந்தியில் படையை விட்டு அவை சிந்துதல் கண்டு நீ இருந்து தேம்புதல் மந்திரம் அன்று நம் வலியெலாம் உடன் உந்துதல் கருமம் என்று உணரக் கூறினான்” என்று கம்பன் கவிதைகள் குறிப்பிடுகின்றன. இராவணன் அதைக் கேட்டுக் கடும்கோபம் கொண்டான். அந்தச் சிறு தொழில் மனிதர்களைத் தேடிச் சென்று இனிவரப் போவதைத் தெரிந்து கொள்வதற்காக உன்னை இங்கு அழைத்து வரவில்லை. நீ எனக்கு வரும் பொருளுரைக்கும் அருந்திறல் அறிவுடைய அமைச்சனுமல்ல. உனது வீரத்திற்கு அச்சம் எற்பட்டு விட்டது. வீரம் விளங்குகின்ற போர் புரிவதற்குரிய வலிமையை நீ பெற்றிருக்கிறாய். அதற்குரிய தீனியும் கள்ளும் பெற்றாய். உனக்கு இன்னும் துக்கம் தெளியவில்லை போலும், நீ போய் உன் கண்களை முடிக் கொண்டு நன்றாகத் துங்கு போ, என்று கூறி “மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக் கூனுடைக் குரங்கையும் கும்பிட்டு உய் தொழில் ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன் யானிது முடிக்கிலேன் எழுக போ கென்றான்”