பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கம்பநாடரும்-இராமாவதாரக்காவியமும் 40 கண்டன விமர்சனங்களுக்கும் கூட கம்பராமாயணம் ஆளாகி -யிருக்கிறது என்பதை அறிவோம். இராமாயணம் என்பதற்கு பதில் அந்தக் கதையைக் கீமாயணம் என்னும் தலைப்பில் நாடகங்கள் நடந்தன. இத்துடன் சேர்ந்து இராமாயண எரிப்புப் போராட்டங்களும் நடந்தன. கம்பன் ஒரு இனத்துரோகி, எனவே கம்பனுடைய காவியத்தை நிராகரிக்க வேண்டும், அது பரவுவதைத் தடுக்க வேண்டும், பள்ளிப் பாடங்களிலிருந்து நீக்க வேண்டும், என்றெல்லாம் கூடக் கருத்துக்களும் செயல் பாடுகளும் வந்தன. கம்ப ராமாயணத்தைக் கம்பரசம் என்றும் காமரசம் என்றும் பல கருத்துக்களும் கட்டுரைகளும் வெளி வந்தன. இவ்வாறு கம்பராமாயணத்திற்குத் தமிழகத்தில் எதிர்ப்புகளும் தோன்றியுள்ளன. கம்பன் காலத்திலேயே அவருடைய காவிய நூலுக்கு எதிர்ப்பு இருந்ததாகக் கதைகள் உள்ளன. இராவணன் சிவபக்தன். இராமன் திருமால் அவதாரம். இராமன், இராவணன் மீது வெற்றி கொண்டான் என்றும் சைவ-வைணவத் தகராறும் இதில் பிரதிபலித்தது. அதே சமயத்தில் அதில் சமரசமும் காணப் பட்டு சிவராமன், ராமலிங்கம் என்னும் பெயர்களும் ஏற்பட்டன. கம்பராமாயணம் ஒரு பொது நூல். அனைவருக்கும் பொதுவான நூல். அது இந்த நாட்டின் பொதுச் சொத்து. அதை யாரும் படிக்கலாம். பாராட்டல்ாம், போற்றலாம், துாற்றலாம், வசை பாடலாம், ஆனால் அவைகளில் எதிர் மறையானவைகளெல்லாம் வரலாற்று நெருப்பில் எரிந்து சாம்பலாயின. அவை வரலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு விட்டன. கம்பராமாயணத்திற்கும் ஆரிய திராவிடக் கருத்துக்களுக்கும் கொள்கைகளுக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. ஆரிய திராவிட இனவாதங்களெல்லாம் புதை பொருளாராய்ச்சிக்குரியவை. காலப் பயணத்தில் பலவகைக் கலப்புகளும் சேர்மானங்களும் நமது நாட்டில் நிகழ்ந்து விட்டன. இராமாயணக் கதையிலேயே இராமனும் குகனும், சுக்கிரீவனும் வீடணனும் சகோதர உறவு கொண்டு விட்டார்கள். பாரத சமுதாயத்தில் ஒன்றிணைந்து விட்டார்கள். எனவே இந்த இனவாதத்திற்கு இலக்கியத்தில் இடமில்லை. நடைமுறை வாழ்க்கையிலும் இடமில்லை.