பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் -ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 39 சடைகளும் தாங்கி ஆயுதமும் தாங்கி வனம் செல்கிறான். "தையல் தன் கற்பும் தன் தகவும், தம்பியும், மையறு கருணையும் உணர்வும் வாய்மையும் செய்ய தன் வில்லுமே சேமமாகக் கொண்டு ஐயனும் போயினான்” என்று கம்பன் குறிப்பிடுகிறார். எனவே கற்பு பெருந்தன்மை, தம்பி, களங்கமில்லாத கருணை, அறிவு, வாய்மை, அத்துடன் வில்லும் சேர்ந்து அவைகளைத் துணையாகக் கொண்டு இராமன் வனம் செல்கிறான். திக் விஜயத்திற்குத் தானே ஆயுதம் வேண்டும்? தவத்திற்குச் செல்வதற்கு வில்லாயுதம் எதற்கு என்னும் கேள்வி எழலாம். கம்பனுடைய மகா கவியத்தில் அதற்கு விடையிருக்கிறது. சமுதாய வளர்ச்சியின் கட்டங்களை கம்பனுடைய காவியத்தில் காணலாம். அயோத்தி, கிட்கிந்தை, இலங்கை ஆகிய மூன்று சமுதாயங்களின் வளர்ச்சி நிலை பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், நெறி முறைகள், ஆயுதங்கள், ஆயுதப்பயிற்சி முதலிய மற்றும் பல விவரங்களையும் காண முடிகிறது. சமுதாய ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான பல விவரங்களையும் இலக்கிய வடிவத்தில் கம்ப காவியத்தில் காணலாம். எனவே கம்பனுடைய காவியத்தைச் சமுதாய விஞ்ஞானப் பார்வையிலும் ஒரு சமுதாய அமைப்பின் மேல்க் கட்டுமானங்களைப் பற்றிய கம்பன் காட்சியைக் காணவும் ஆராயவும் அறிந்து கொள்ளவும் செய்யலாம். எதிர்ப்பும் கண்டன விமர்சனங்களும் கடவுள் எதிர்ப்புக் கொள்கை கொண்ட பலரும் இராமன் எதிர்ப்பு கொண்டு அதன் மூலம் இராமாயண எதிர்ப்புக் கருத்துக்களும் தமிழகத்தில் பெரிதும் வெளிப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் முற்றி வக்கிரமடைந்து இராமாயணத்தை எரிக்க வேண்டும் எரித்து விட வேண்டும் என்ற அளவிற்கு உச்சத்திற்கும் சென்றதைக் காண்டோம். இராமாயணம் ஆரியக் கதையென்றும் அது தமிழனை இழிவு படுத்தியுள்ளது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன. இராமன் கடவுள் என்று கூறுவதைக் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் பேச்சுக்களும் எழுத்துக்களும் வந்துள்ளன. இராமன் இராவண பாத்திரங்களை வடக்கு தெற்காகப் பார்த்து ஆரியன் - திராவிடன் என விளக்கம் கொடுத்து எதிர் மறையான தாக்குதல்களுக்கும்