பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

சென்று, தமிழை வளர்த்த அகத்திய முனியை ஏற்றிப் போற்றுகிறார். கம்பனுடைய இராமன் வட மொழியிலும் தென் மொழியிலும் தேர்ச்சி பெற்றவனாக விளக்குகிறார்.

பெரும் கவிஞன், கவிச் சக்கரவர்த்தி கம்ப நாடருடைய மகா காவியத்தில் காணக்கிடக்கும் கடவுட் கொள்கை, சமயக் கொள்கை, மானுடத்தின் உயர்வு, சகோதரத்வமும், சகோதர உறவும், அரசியல் நெறி முறைகள், தமிழ் மொழியின் தனிச் சிறப்பு முதலியவற்றைத் தொகுத்துக் கூறும் இந்த நூலை கம்பனுடைய தலை சிறந்த சமுதாயக் கருத்துக்களாக, மக்களுக்கு வழி காட்டும் நெறிமுறைகளாக தமிழ் மக்களிடம் சமர்ப்பித்துக் கொள்கிறோம். தமிழ் கூறும் நல்லுலகின் ஆதரவையும், அறிஞர்களின் ஆசியையும் வேண்டுகிறோம். இந்நூல் மிகவும் சிறப்பாக அமையவும், வெளிவரவும் உதவிய அனைவருக்கும் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

{{{pagenum}}}