பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. sub-gyeo–ul s-au – Glærersosulub supunë oksirereoeute 78 என்று இந்திரன் வாயிலாக இராமனைப் பெருமைப் படுத்திக் கம்பன் ஒரு மாபெரும் தத்துவத்தை மூன்று வகையில் விளக்கிக் கூறுகிறார். சீதையைக் கவர்ந்து கொண்டு இராவணன் வானவெளியில் சென்றபோது அவனைத் தடுத்து சடாயு அறிவுரை கூறுகிறான். இராம இலக்குவர்களைப் பற்றி முத்தேவரின் மூல முதற் பொருளாம் அத்தேவர் இம்மானிடர் என்று குறிப்பிட்டு இராவணனுக்கு ತ್ಗ இங்கு மீண்டும் இராமபிரானை, சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவருக்கும் முதல்வனான மூல மூர்த்தியாக மூல முதற்பொருளாகlசடாயு வாயால் கம்பன் எடுத்துக் கடறுவதைக் காணலாம். கவந்தன் என்னும் பெரும்பூதம் போன்றவொரு அரக்கன் தனுவென்னும் கந்தருவன் ஒரு சாபத்தால் இந்தக் கவந்தனானான் என்பது கதை. அக்கவந்தன் தன்னருகில் வருபவர்களையெல்லாம் பிடித்து விழுங்கி வந்தான். இராமனும் இலக்குவனும் கவந்தன் இருக்குமிடத்திற்கு வந்தனர். இருவரும் அவனருகில் சென்று அவனுடைய கைகளை வெட்டி வீழ்த்தினர். கவந்தன் சாபம் நீங்கினான். சாபம் நீங்கின கவந்தன் இராமனைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான் என்பது கம்பருடைய வாக்காகும். “ஆதிப் பிரமனும் நீ ஆதிப் பரமனும் நீ ஆதியெனும் பொருளுக்கப்பால் உண்டாகிலும் நீ சோதி நீ சோதிச்சுடர்ப் பிழம்பும் நீ யென்று வேதம் உரை செய்தால் வெள்.காரோ வேறுள்ளார்? ” என்றும், அத்துடன் "மாயப் பிறவி மயல் நீக்கி மாசிலாக் காயத்தை நல்கித்துயரின் கரை யேற்றிப் பே_யொத்த பேதைப் பிணக்கறுத்த எம்பெருமான்” என்றும் கவந்தன் வாயால் கம்பன் இராமனைப் போற்றுகிறார். இராமனை ஆதிபரம்பொருளாகக் கம்பன் காண்கிறார். இப்பாடல்களெல்லாம் ஆழ்வார்களின் பக்திப் பாடல்களைப் போலமைந்துள்ளன.