பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


104 திருவெம்பாவை விண்ணப்பிக்கும் பழக்கம் தொன்று தொட்டே வந்துள்ளதாக அறிய வருகிறது. திருவொற்றியூரில் வீரராசேந்திர சோழன் கி. பி. 1063 முதல் 1070 வரை அரசாண்ட சோழவரசன் ஆவன். அவன் காலத் தில் தொண்டை நாட்டில் மணலியாகிய சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் தரிசாகக் கிடந்த 60 வேலி நிலம் செவ்வன் திருத்தி யமைக்கப் பெற்றது ; 'வீரராசேந்திர வளாகம்’ என்ற புதிய பெயரும் கொடுக் கப் பெற்றது. அந்நிலத்தின் வருமானத்தைக் கொண்டு வீரராசேந்திர தேவரின் ஆயுள் நீடித்தற் பொருட்டும், அன்னுேர் குழந்தைகளின் உடல்நலத்தின் பொருட்டும் திருவொற்றியூர்க் கோவிலில் பல அறங்கள் நிகழ்த்த வழிவகை செய்யப் பெற்றது. ஓர் இசைவல்லார் தி ரு ப் ப ள் வளி எழுச்சி பாடுத்ல் வேண்டும் ; திருவாதிரைத் திருநாள் விழா நடத்த வேண்டும் ; அப்பொழுது திருவெம்பாவை ஓதுதல் வேண்டும் ; பாடலும் ஆடலும் வல்ல இருபத்திரண்டு தளியிலாருக்கு ஊதியம் தரவேண்டும்; ஒர் ஆடல் ஆசிரியனேயும் நியமிக்க வேண்டும்; திருப்பதியம் அகமார்க்கத்தில் பாடும் பதினறு தேவரடியார்க்கு ஊதியம் தருதல் Gsusir@h (128 of 1912; A. R. E. 1913, Para 32)— என்பன அவ்வறங்களாகும். சகர யாண்டு 1293 இல் கம்பண உடையார் உத்தர வின்படி துணையிருந்த தம்பி கொங்கராயருடைய தலைமை யில் பதியிலார், ரிஷபத்தளியிலார், தேவரடியார் முதலி யோர்க்குள்ள் மனவேற்றுமை தீர்ப்பதற்குக் கூட்டம்