பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8


8 ஒரு தடவையும், அடுத்து மூன்று நாட்களும், வைகாசித் திருநாளின் பிற்றை நாட்டொடங்கி மூன்று நாட்களும், ஆக மொத்தம் ஏழு தடவை திருவிடை மருதில் உடை யார் திருமுன் ஆரியக்கூத்து ஆடுவதற்குப் பதினற் கலம் நெல் பெறுவதற்காக ஒரு வேலி நிலம் ஒதுக்கப் பெற்றது. இங்ங்னம் திருவிடைமருதூர்க் கல்லெழுத்து ஒன்று பகர்கின்றது. 2 திருவாவடுதுறையில் ஆரியக்கூத்து-சாக்கைக் காணி இனிப், புரட்டாசித் திருவிழாவில் திருவாவடுதுறை எம்பெருமான் . திருகோயிலில் திருமூல நாயனுரது நாடகமும், ஆரியக் கூத்து ஏழு அங்கமும் ஆடுவதற்குக் குமரன் ரீகண்டன் என்பவர்க்கு நிருத்திய போகமாக நிலம் அளிக்கப் பெற்றது என்றும், அவன் சாக்கைக் காணி உடையவன் என்றும், முதலாம் இராசராசனது 9 ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. மானம்பாடியில் தமிழ்க் கூத்து-கூத்தக் காணி முதற் குலோத்துங்க சோழனது 18 ஆம் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்தினின்று தமிழ்க் கூத்து ஆடுவது குறித்து அறியப் பெறுகின்றது. மிழலை நாட்டு வீரநாராயணபுரத்தில் கைலாசமுடைய மகாதேவர் கோயிலில், சித்திரைத் திருவிழாவில் 5 தடவை தமிழக் 12. S. I. I. Vol. V No. 718. 18. 120 of 1925, 14. 90 of 1932.