பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


9 கூத்து நிகழ்த்த, விக்ரமாதித்தன் திருமுதுகுன்றன் ஆன விருதராச பயங்கர ஆசார்யன் என்பவர்க்கு நாகன் பாடியில் கூத்தக் காணியாக நகரத்தாரும் கோயிலாரும் நிலம் அளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. சாக்கைக் கூத்து கீழைப் பழுவூரில் பரகேசரிவர்மனது ஆரும் ஆட்சி யாண்டுக் கல்லெழுத்து, திருவாலந்துறை நல்லூரில் அற்பசித் திங்களில் திருவிழாவில் அசுவதி நாளில் சாக்கைக் கூத்து மூன்று அங்கங்கள் நிகழ்த்த ஆலேயூர்ச் சாக்கைக்கு 1; கழஞ்சு பொன்னும் மூன்று கலநெல்லும் கொற்று அளித்ததாகக் கூறுகின்றது. முதல் இராசேந்திரனது 29 ஆம் ஆட்சியாண்டுக் கல்லெழுத்துக்குரிய காமரச வல்லிக் கல்லெழுத்து " மார்கழி வைகாசி மாதங்களில் திருவாதிரைத் திருநாட் களில் மூன்று முறை சாக்கைக் கூத்து ஆடச் சாக்கை மாராயன் விக்ரம சோழன் என்பார்க்குக் காமரசவல்லிச் சதுர்வேதி மங்கலத்தார் நிலம் அளித்தனர் எனப் பகர்கின்றது. கூத்தச் சாக்கையன் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொணர்ந்து வஞ்சிமாடம் புகுந்தனன்; ஒலக்க மண்டபம் செல்லும்போது இடையிலுள்ள நாடக அரங்கத்து நிகழ்த்தப் பெற்ற கூத்தொன்றைக் கண்டான்; அந்தக் S T T TT T T T S TS T S S S S S S S S S S S S S S 1 5. 250 of 1926. 16. 65 of 1914.