பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


13 புலவரான வீராந்தப் பல்லவரையன் என்பார் விண் ணப்பித்துக் கொண்டார் என்றும், அப்புலவர் விருப்பத் தின்படி அவ்விருத்தி நடத்துமாறு மேற் கூறிய நிருத்தப் பேரரையன் அரசாணையால் நியமனம் பெற்றனன் என்றும் கூறப் பெற்றுள்ளன. இராஜராஜேசுவர நாடகம் இது முதல் இராசராசன் காலத்து இயற்றப்பெற்ற நாடக நூல்; இராசராசனது பிறப்பு வளர்ப்புக்களையும், வீரம் தியாகம் முதலிய அருஞ்செயல்களேயும், அவன் தஞ்சையில் இராசராசேச்சுரமான பெரிய கோயில் கட்டப் பெற்ற வரலாறுகளேயும் பற்றிப் பாடப் பெற்ற தாதல் வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர்.' வைகாசிப் பெரிய திருவிழாவில் தஞ்சைப் பெரிய கோயி லில் நடித்துக் காட்டுவதற்குச் சாந்திக் கூத்தன் திருவாளன்’ திருமுதுகுன்றன் ஆன விஜய ராஜேந்திர ஆசார்யனுக்கும் அவன் வர்க்கத்தார்க்கும் இரண்டாம் இராசேந்திர சோழன் 120 கலம் நெல் நிபந்தம் அளித் தான். இச்செய்தி தஞ்சையிலுள்ள இரண்டாம் இராசேந் திர சோழனது 6 ஆவது ஆட்சியாண்டுக் கல்லெழுத்தால் 315 usorib (55 of 1893; S. I. I. Vol II No. 67). திருப்பந்தனை நல்லூர் முதல் இராசராசன் காலத்தில் திருப்பந்தணை நல்லூர்க் கோயிலில் நட்டுவப்பங்கு மெய்ம்மட்டுப் 22. விர நடப்பல்லவரையன் Colas Part II P. 898 28. மு. ரா. சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக்கம் 87-88. 24. மு. ரா. சாசனத் தமிழ்க்கவி சரிதம், பக்கம் 48-49. 25. திருவாலன் என்பது கல்வெட்டில் கண்ட சொல்.