பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


18 இப்பொழுது அளித்ததையும், சவர்ணன் அரையன் மதுராந்தகனும் அவருடைய சந்ததியாரும் அநுபவிக்க லாம் என்றும், அவ்வைத்தியர் மருகல் என்னும் ஊரினர் என்றும், பழையாற்றில் தன் அரண்மனையில் இருந்து இவ்வுத்தரவுகளை இவ்வம்மையார் அளித்தனர் என்றும், இவற்றைப் பேரவையினர் கல்லில் வெட்டினர்கள் என்றும் இன்னுெரு கல்லெழுத்து அறிவிக்கிறது." திருவாவடுதுறையில் இராசேந்திரசிங்க வளநாட்டு இன்னம்பர் நாட்டுப் பழையவானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையார் (முதலாம் இராசேந்திரனின் 4ஆம் ஆட்சியாண் டில்) 120 காசு பெற்றுக் கொஞ்சம் நிலமும் மனேகளும் ஆழ்வார் நீ பராந்தகன் குந்தவைப் பிராட்டியார்க்கு விற்றனர். அந்நிலங்களை அவ்வம்மையார், “சவர்ணன் அரையன் சந்திரசேகரன் ஆன உத்தம சோழ அசலன்” என்பானும் அவன் வழியினரும் அவ்வூர் வைத்தியராக இருந்து பணியாற்றும் பொருட்டு அவ்வைத்தியருக்கு அளித்தார். " விக்கிரம சோழனின் 3ஆம் ஆட்சிக்கு (கி. பி. 1121) உரிய கல்லெழுத்தினின்று திருவாவடுதுறையில் ஒரு வைத்தியக் கல்லூரி யிருந்ததாக அறிகிருேம். சங்கர தேவன் அறச்சாலை என்று ஒரு உணவுச் சாலை 4. 249 of 1928 (முதலாம் இராசேந்திரனின் 7-ம் ஆட்சி ஆண்டு). 5, 1 1 2 of 1925. 6. F59 of 1925. 單