பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


40 சிதம்பர நாதன் திருமூலநாத முதலிக்குப் பண்டுடை மனயும் பழம் பேரையும் தவிர்த்துத் திருப்பாட்டுக் காணி யாட்சையாகக் கற்பிக்கும் படிக்கு நம் குமாரன் அழக சொக்களுர் அபிராம பாண்டியன்...... ஒலையும் விடுகையில்' என்பது அதிவீர ராம பாண்டியரின் சாஸனப்பகுதி. இவர் சகம் 1486 (கி. பி. 1564) இல் பட்டம் எய்தியவர். இவர் மகன் அழக சொக்கர்ை அபிராம பாண்டியன் என்பார் திருவண்ணுமலேப் புலவர் சிதம்பரநாதனுக்குத் திருப்பாட்டுக்காணி யாட்சி யளித் தனர் என்பதே அச்சாஸ்னத்தில் (T. A. S.Vol I பக்கம் 279-80) கண்ட செய்தியாகும். பாவெனப் படுவதுன் பாட்டு, பூவெனப் படுவது பொறி வாழ்பூவே என்று துறைமங்கலம் சிவப்பிரகாசர், திருவாசகத்தையே பாட்டு என்று கூறியிருப்பினும், சுந்தரர் தேவாரத்தைத் திருப்பாட்டு என்று கூறும் மரபும் உண்டு, எனினும் "இங்குத் திருப்பாட்டு’ என்பது பொதுவாகத் தேவாரத் திருமுறைகளையே குறித்ததாதல் வேண்டும். பெரிய திருப்பாட்டு விசயநகரப் பேரரசர்களுள் சிறந்தவர் கிருஷ்ண தேவராயர். இவர் சகம் 1438 இல் காளத்திக்கு எழுந் தருளிக் காளத்திநாதனைச் சேவித்து நூற்றுக்கான் மண்டப மும் பெரிய கோபுரமும் கட்டுவித்துத் திருவண்ணுமலேக்கு வந்து பல சிவத் தொண்டுகளைச் செய்தார் என்று திருவண்ணுமலேக் கல்லெழுத்தொன்று (165 of S. 1. 1. Vol VIII ; No. 574 of 1902) 5susbstopg. 913, asso லெழுத்தில் "பெரிய திருப்பாட்டு ஒதுவார் பேர் 2”