பக்கம்:கல்லெழுத்துக்களில்....pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61


61 பிறர் கெடுக்காதவாறு செய்யவும், யாகத்தில் யாருக் கேனும் நோய்வரின் அந்நோயைப் போக்கவும், அதர் வண வேதம் இன்றியமையாததாயிற்று. இவ்வதர்வண வேதத்துள்ளும் 75 உருத்திர மந்திரங் கள் உள்ளன. சிலவற்றின் பொருள் பின்வருமாறு: பச்சை ஊன் உண்ணும் காக்கை முதலான பறவை களும், ஈக்களும், பொதுவாய பறவைகளும் உணவில் உட்காராதபடி அருள்புரிவீராக (2). சுவர்க்கத்தில் இரவியாகவும், அந்தரிக்கத்தில் வாயு வாகவும், பூமியில் அக்கினியாகவும் விளங்கும் உருத்திர பரமேசுவர! உனக்கு வணக்கம் (4). உயிர்களைப் பரிபாலிக்கும் உருத்திர பரமேசுவர! உனது திருமுகத்துக்கு வணக்கம். உயிர்களைப் படைப் போய்! உனது திருமுகத்துக்கு வணக்கம். இரவிமதி தீ என்னும் உனது முக்கண்ணிற்கும் வணக்கம் (5). உருத்திரபரமேசுவர! உனக்கு மாலைப் போதில் வணக்கம்; காலைப் போதில் வணக்கம்; இரவில் வணக்கம்; பகலில் வணக்கம் (16). ...... போற்றத்தக்க கிரண மண்டலத்தின் நடுவி லிருந்து வானின் மழையைப் பெய்விக்கின்ற உனக்கு வணக்கம் (24). உருத்திரபரமேசுவர! எமது பிணியை நலப்படுத்தி யருள்வாயாக; எமக்கு நலம் தருவாயாக, எமது சுற்றத் தார்கள் அனைவரும் பிணியால் பீடிக்கப்படாதவர் களாகுக; பிணிகளும் அடங்கி ஒழிய உலகனேத்தும்